மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் இன்று முதல் இலவச மருத்துவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைய, குறித்த வைத்தியசாலைக்கு நிர்வாகக் குழுவை நியமிக்க அனுமதி கிட்டியது.
இதன்படி, இதன் புதிய தலைவராக வைத்தியர் அஜித் மென்டிஸ் செயற்படுவதோடு, பணிப்பாளர் நாயகமாக ரியல் அத்மிரல் என்.ஈ.டப்ளியூ.ஜெயசேகர கடமையாற்றுகிறார்.
இந்த வைத்தியசாலை ஊடாக இன்று முதல் அனைத்து நோயாளர்களுக்கும் தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதோடு, இதற்குத் தேவையான மருந்துகள் அனைத்தும் நேற்று மாலை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.
0 comments:
Post a Comment