வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசா யாழ் விஜயம்.

(அஷ்ரப் ஏ சமத்)

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா்  சஜித் பிரேமதாசா  நேற்று (12) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தாா்.  அங்கு யாழ்ப்பாணம்,  கிளிநொச்சி மாவட்டஙக்ளில உள்ள  400 இளைஞா் யுவதிகளுக்கு நிர்மாணத்துறையில்” சில்பி சவிய” என்ற வீடமைப்பு அமைச்சின் நிர்மாணத்துறை அதிகார சபையினால்   மேசன், தச்சுத் தொழிலில் பயிற்சிஅளிக்கப்பட்டு நிர்மாணத்துறை உபகரணங்கள் அடங்கிய பைகளும் வழங்கி வைக்கப்பட்டது.நிர்மாணத்துறையில்   ஈடுபடுத்துவதற்காக 2 மாதகால பயிற்சியளிக்கப்பட்டு அத்தொழிலை நிரந்தரமாக சுயதொழில் மூலம்   செய்வதற்காக என்.வி.கி.யு சான்றிதழும் வழங்கப்பட்டடு   இலவசமாக ஆயுதங்கள் அடங்கிய கைப்பைகள் மற்றும் நிர்மாணம் முத்திரை பொறிக்கபட்ட  சீறுடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இத்திட்டம் அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருத்தின் கீழ் நாடுமுழுவதிலும் 1 இலட்சம்  பேரை நிர்மாணத்துறையில் பயிற்றுவித்து இத்துறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்  கொடுக்கும் திட்டமாகும். 


இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டவா்கள்    தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால்  வடக்கில்   மேற்கொள்ளப்பட்டு வரும் சமட்ட செவன வீடமைப்பு கிராமங்களை நிர்மாணிப்பதற்கு ஈடுபடுத்தப்படுவாா்கள்.    இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சா்  விஜயகாலா மகேஷ்வரன்  ,பாராளுமன்ற உறுப்பிணா்  மாவை சேனாதிராஜாவும் மற்றும் யாழ்ப்பாண மவாட்ட  பாராளுமன்ற உறுப்பிணா்களும் கலந்து சிறப்பித்தனா் 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment