நாட்டில் தமிழ் மொழிக் கொலைகள் இடம்பெறுவது நிறுத்தப்பட வேண்டும்.

நேற்று பா.மன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் மணோகணேசன் பதிலளிக்கும் போது குறிப்பிட்ட விடயங்கள் சில.

நாடு முழுக்க இருக்கக் கூடிய எல்லா பெயர்ப் பலகைகளும் மூன்று மொழிகளிலும் தெளிவாக, எழுத்து பிழையில்லாமல் இருக்க வேண்டும். சிங்களத்திலே பெரிதாக எழுதிவிட்டு, தமிழிலே சிறிதாக எழுத முடியாது. அப்படி எழுதப்படுமானால் தமிழர்களுக்கு மாத்திரம் நான் கண்ணாடி கொடுக்க வேண்டி வரும். அப்படி வழங்க முடியாது. அதற்கான சந்தர்ப்பம் கிடையாது.

நாடு முழுக்க சிங்களமும், தமிழும் சமமான ஆட்சி மொழிகள். ஆகவே அரசாங்க பெயர் பலகைகள் எழுதும் போது, வடக்கு, கிழக்கில் தமிழ், சிங்களம்,ஆங்கிலம் என்ற வரிசை பேணப்பட வேண்டும். ஏனைய மாகாணங்களில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்ற வரிசை பேணப்பட வேண்டும்.

அதேபோல், அரசாங்க திட்டங்களுக்கு, சிங்கள மொழியில் பெயர்களை வைத்து விட்டு, அது புரிந்தாலும் புரியாவிட்டாலும் கூட அப்படியே தமிழ் மொழியில் உச்சரிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அது சட்ட விரோதமானது, பிழையானது.

இன்று காலை பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகாவின் ஒரு திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்து இருந்தது. அந்த திட்டத்தின் பெயர் "சியவெர" என்பதாகும். இதற்கு நான் "சுயசக்தி" என்ற தமிழ் பெயரை இங்கே சூட்டுகிறேன். இதோ இப்போது சபையில் இருக்கும் அமைச்சர் பொன்சேகாவுக்கு காலையிலேயே இதை நான் அறிவித்து விட்டேன். இனிமேல் இது தொடர்பில் என் அமைச்சின் மொழியுரிமை பிரிவு கவனம் செலுத்தும்.

என் திட்டங்களை படிப்படியாக அமுல் செய்ய எனக்கு கால அவகாசம் தாருங்கள். என்னை நம்புங்கள். நான் இவற்றை செய்து முடிப்பேன் என அமைச்சர் மணோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment