சாய்ந்தமருது பிரதேசசபைக்காக அன்றும் இன்றும் உழைப்பவர் அதாவுல்லா மாத்திரமே.

சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை கூடிய விரைவில் மலர இருப்பதாக பரவலான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் சாய்ந்தமருதுக்கு அதிகாரம் வழங்கியது மு.காதான் என முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளும் இல்லை மக்கள் காங்கிரசின் முயற்சியால் கிடைத்தது என மயில் போராளிகளும் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை அதிகாரம் கிடைக்க வேண்டும் என முதன் முதலில் முயற்சித்தது தே.காங்கிரஸ் என குதிரையின் ஆதரவாளர்களும் அந்த வெற்றிக்கு உரிமைகொண்டாடும் படலம் இப்போது ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச செயலகத்தை கொண்டுவந்து சாதித்ததுடன் மட்டுமல்லாது சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வர வேண்டும் என்று முதன் முதலில் அதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன் சாய்ந்தமருதின் நலனில் கூடிய கரிசனை கொண்டவராக முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல் எம்.அதாவுல்லா இருந்தார் என்பதை யாராலும் எவராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. குதிரையை அவ்வளவாக ஆதரிக்காமல் விட்டாலும் சாய்ந்தமருதுக்கு தனது சேவையை சிறப்பாக செய்தவர் என்றால் அது மு.அமைச்சர் அதவுல்லாஹ்வையும் அவரது கட்சியையும் குறிப்பிட்டு கூறலாம். அதற்க்கு சாட்சியாக சாய்ந்தமருது மாளிகைக்காடு எல்லை வீதியை காபட் இட்டது முதல் உள்ளூர் வீதிகளை கொங்கிரீட் விதிகளாக மாற்றியமைத்து முதல் சாய்ந்தமருது வைத்தியசாலை,பாடசாலை கட்டிடங்கள் என்று உள்ளது.

மு.அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை நிறுவ சகல ஏற்பாடுகளையும் முடித்து விட்டு வர்த்தகமானி அறிவித்தல் வருவதற்க்கு முன்னர் கிழக்கின் முக்கிய அரசியல் கட்சியான மு.கா தடுத்ததாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தார். இதனடிப்படையில் நோக்கினால் இன்று அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் அன்றைய ஆட்சி மாற்றத்திக்கு முன்னர் சாய்ந்தமருதுக்கு வரவிருந்த தனியான பிரதேச சபையை தடுத்து நிறுத்தியவர்கள் என்பது உண்மையாகிறது. (பகிரங்க குற்றசாட்டை மு.கா எந்தவிதத்திலும் மறுக்கவில்லை,மௌனமாக இருந்து அந்த செய்தியை உண்மை என ஏற்றுகொண்டது.)


பிரதேச வாதம் பேசி அரசியல் நடத்தும் அரசியல் கும்பல்களும் அரசியல் கொந்துராத்து க்காரர்களும் தமது அரசியல் இருப்பிடங்களை தக்கவைத்துக் கொள்ள இன்று சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை வர காரணம் நாங்கள் தான் என பகிரங்கமாக சன்டையிட்டு சமூக வலைத்தளங்களை நாரடிப்பதை பார்க்கின்ற போது வேடிக்கையாக உள்ளது.

சாய்ந்தமருதுக்கான சபை மலரும் என கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் மு.காவின் மேடையில் பிரதமர் வாக்குருதியளித்திருந்தார் அத்துடன் ,கல்முனை,சம்மாந்துறை மாநகரங்களை அபிவிருத்தி செய்து தரப்படும் என மேலும் தனது வாக்குறுதியில் சுட்டிகாட்டியிருந்தமையும் இரண்டு வருடங்கள் கடந்து மூன்றாம் வருடமும் இன்னும் சில நாட்களில் கடந்து போக இருக்கின்ற போதும் அந்த வாக்குறுதிகள் காற்றிலையே இருக்கின்றதே தவிர செயலில் இல்லை. என்றாலும் பிரதமர் வாயிலால் அந்த வாக்குறுதியை வழங்கச்செய்ய மு.கா தலைமை எடுத்த முயற்சியை பாராட்ட வேண்டும். 

அது மட்டுமின்றி சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முக்கியஸ்தர்களின் பங்குபற்றலுடன் அப்போதைய உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் கரு ஜெயசூரிய அவர்களிடம் இந்த சபையின் முக்கியத்துவம் பற்றி விளையாட்டு பிரதியமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் எடுத்துக்கூறி இதற்கான முயற்சியில் கடுமையாக பாடுபட்டதையும் இங்கு யாரும் மறைக்க முடியாது.அத்துடன் நில்லாது இப்போதைய உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களிடமும் இதற்கான முயற்சிகளை மு.கா தீவிரமாக செய்துவந்ததை ஊடகம் வாயிலாக உலகமே அறியும். 

இவை அனைத்தும் ஒருபுறமிருக்க அமைச்சர் ரிஷாத் அவர்களின் கட்சியான மக்கள் காங்கிரசிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் 33000க்கும் அதிகமான வாக்குகளை வழங்கியிருந்ததனால் அவர் நன்றி மறவாமல் அந்த மக்களுக்கு சேவை செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் அவரின் அமைச்சின் ஊடாக தொழில் நிறுவனங்களும் அமைத்து அத்துடன் சில கட்சி போராளிகளுக்கும் வேலைவாய்ப்புகள் என்றும் வழங்கி அம்பாறை மாவட்ட மக்களுக்கு தன்னால் ஆன சிறிய நன்றிக்கடன் செய்துள்ளார். அவரது தேர்தல் கால வாக்குறுதிகளில் ஒன்றான சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை பிரகடனம் இப்போது கைகூடி வந்துள்ளதாக சந்தோஷ அறிக்கைகள் உலா வர ஆரம்பித்துள்ளது.

இந்த சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை பிரகடனத்தில் எங்கள் பக்கம் தான் வெற்றி என மு.காவை போல மக்கள் காங்கிரசும் சொந்தம் கொண்டாடினாலும் அதன் உண்மையை குறித்த அலுவலகர்களும்,அரசியல்வாதிகளும் அல்லாஹ்வுமே அறிவான். இந்த சாய்ந்தமருது சபை மலர வேண்டும் என்பதில் சாய்ந்தமருதின் சகல அரசியல் பிரமுகர்களும் கட்சிபேதங்களுக்கு அப்பால் ஒரே சிந்தனையில் இருந்தமை இங்கு பாராட்டப்பட வேண்டியது.

இந்த சபையை கொண்டுவர மக்கள் காங்கிரசும் பல தியாகங்களையும்,முயற்சிகளையும் தொடர்ந்தும் எடுத்து வந்துள்ளது.இதன் உச்ச கட்டமாக இப்போதைய உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களை உலங்கு வானூர்தி மூலம் சாய்ந்தமருதுக்கு அழைத்து வந்து அமைச்சர் ஹக்கீம் புகைப்படம் எடுக்கத்தான் என்னிடன் வந்தார் ஆனால் அமைச்சர் ரிசாத் சபை எடுக்க என்னிடன் வந்தார் என கூறவைத்து ஹீரோவும் ஆனார்.


எது எதுவாக இருந்தாலும் அதாவுல்லா அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச மக்களுக்கான தனியானஉள்ளுராட்சி சபையை பெற்றுக்கொள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரிஷாத் பதியூதின் அவர்களின் தலைமையிளாலான மயில் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ அமைச்சர் ஹக்கீம் தலைமையிலாலான மரக்கட்சியும் பல தடைகளையும் தாண்டிய முயற்சியினால் கொண்டுவரப்படும் உள்ளுராட்சி சபை அங்கீகாரத்தை நாம் பூனைக்கு மணி கட்டியது யார் என சண்டையிடாமல் மனமாற பாராட்டி வரவேற்போம்.

சாய்ந்தமருதுக்கு அரசியல் அதிகாரம் வழங்க வேண்டு்ம் என்று முதலாவது என்னிய மக்கள் தலைவன் என்றால் அது முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவையே சாறும் . இரன்டாவதாக அமைசச்சர் ரிஷாத் அதே பாணியில் பயணித்து சாய்ந்தமருதுக்கான அதிகாரம் வழங்க கடந்த பாராளுமன்ற தேர்தலில் சாய்ந்தமருதில் தமது செல்வாக்கை செலுத்தி போராடினார் என்றாலும் வியாபார அரசியலுக்கு மயங்கிய மக்கள் அந்த போராட்டத்தை நிராகரித்து அதாவுள்ளஹ்வையும்,ரிசாத்தின் கட்சியையும் மண்கவ்வ செய்தனர்.


சிலரின் முயற்சியினாலும் பாரிய சதியினாலும் மஹிந்த ஆட்சி முடிவுக்கு வந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நன்றி மறந்த சமூகம் அதாவுள்ளாவையும் புறந்தள்ளி சமூக துரோகி என்ற பட்டத்தையும் வழங்கியது. ஆனால் இன்று அம்பாறையில் கையாளாகாத அரசியல்வாதிகளினால் அம்பாறை முஸ்லிங்கள் கைசேதப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும் யாரோ பிரசவிக்கும் பிள்ளைக்கு தனது இனிசியலை இட முன்னே வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

என்றாலும் எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல் காலங்களில் சாய்ந்தமருதுக்கு யார் உண்மையான அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தார்கள் என்பதை அல்லாஹ் நம் அனைவருக்கும் வெளிச்சம் போட்டுக்காட்டுவான். (கத்தரி முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகணும்..... )
என்றாலும் சாய்ந்தமருது மக்கள் யார் குத்தினாலும் அரசி வந்தால் சரி என்றிராமல் இனியாவது சரியானவர்களை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு தமது மண்ணை வளப்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

ஹுதா உமர் 

தலைவர்,அல்-மீஸான் பௌண்டசன் 
இலங்கை.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment