மியன்மார் செல்லவிருக்கும் போப் பிரான்சிஸ்.


புத்த மதத்தை சேர்ந்த மக்கள் அதிகமாக வாழ்ந்துவரும் மியான்மர் நாட்டில் சிறுபான்மையினத்தவர்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்களுக்கான சம உரிமைக்காக போராடி வருகின்றனர். இவர்களில் சிலர் ஆயுதமேந்திய புரட்சிப் படையினராக இயங்கி வருகின்றனர்.

அவ்வப்போது தலைதூக்கும் இவர்களது போராட்டம் அரசுப் படைகளால் அடக்கப்படுவதும், பின்னர் சிறிது மாதங்களுக்கு பின்னர் மீண்டும் போராட்டம் வெடிப்பதும் இங்கு இயல்பாக உள்ளது. சமீபத்தில் தலைதூக்கிய ரோஹிங்கியா போராட்டத்தில் சுமார் 100 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

ராணுவத்தால் அடித்து விரட்டப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டைநாடான வங்காளதேசம் எல்லைப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், ரோஹிங்கியா முஸ்லிம் சகோதரர்களுக்கு உரிய அங்கீகாரத்தை மியான்மர் அரசு அளிக்க வேண்டும் என்ற கருத்தை சுமார் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மத குருவான போப் பிரான்சிஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அவர்களது போராட்டம் வெற்றிபெற நல்லமனம் கொண்ட மக்கள் உதவிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 27-ம் தேதி மியான்மர் நாட்டுக்கு போப் பிரான்சிஸ் செல்வதாக இத்தாலியில் உள்ள வாட்டிகன் அரண்மனை இன்று அறிவித்துள்ளது. 

மியான்மர் என்னும் புதிய பெயர் மாற்றத்துக்கு முன்னர் பர்மா என்றழைக்கப்பட்ட காலகட்டத்தில் கடந்த 1986-ம் ஆண்டில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் அந்நாள் மத குருவாக ஆக பதவிவகித்த போப் இரண்டாம் ஜான் பால் இந்நாட்டுக்கு வந்திருந்தார். அதன் பின்னர், 31 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது போப் பிரான்சிஸ் இங்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

27-ம் தேதியில் இருந்து 30-ம் தேதிவரை மியான்மரில் தங்கியிருக்கும் போப் பிரான்சிஸ், 30-ம் தேதியில் இருந்து டிசம்பர் 2-ம் தேதிவரை வங்காளதேசம் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment