மதிப்புக்குரிய அலியார் ஹஸ்ரத் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் சில.

பெரிய ஹஸ்ரத் என்று எல்லோராலும் அழைக்கப்படும் அலியார் ஹஸ்ரத் அவர்களின் இழப்பு சம்மாந்துறைக்கு மாத்திரமல்ல அனைத்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் பேரிழப்பாகும்.

நாட்டில் பயங்கரவாதம் தலைதுாக்கிய காலங்களிலெல்லாம் மக்களின் உணர்வுகளை நெறிப்படுத்தி அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி சமூக இன நல்லுறவு ஏற்படுவதற்கு அன்னார் அயராது பாடுபட்டார்.

மதிப்புக்குரிய பெரிய ஹஸ்ரத் அவர்கள் 1939 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி இஸ்மாலெப்பை முகைதீன் பாவா - மிஸ்கீன் பாவா பாத்திமா தம்பதிகளுக்கு புதல்வராக பிறந்து தனது பாடசாலைக் கல்வியை சம்மாந்துறை மத்திய மஹாவித்தியாலயத்தில் 6 ஆண்டுகள் கற்றுவிட்டு தனது 21வது வயதில் 1959 ஆண்டு மார்க்க கல்வியை காலியில் உள்ள மத்ரஸத்துல் பாரி அரபுக் கல்லுாரியில் 4 வருடங்களும் மஹரகமயில் உள்ள கபூரியா அரபுக் கல்லுாரியில் 1 வருடமும் பயின்றார்.

தொடர்ந்து 1964ம் ஆண்டு இந்தியாவில் உள்ள தாவுதியா அரபுக் கல்லுாரியில் மார்க்கக் கல்வியை தொடர்ந்து கற்று 1968ம் ஆண்டு மௌலவியாக வெளியேறினார். அதே ஆண்டு இந்தியாவில் உள்ள தேவபந்த ஜாமிஆ காஸிமியா அரபுக் கல்லுாரியில் சேர்ந்து  தப்ஸீர் கலை, ஹதீஸ்கலை, அரபு இலக்கியம் ஆகிய துறைகளில் உயர்கல்வியைப் பூர்த்தி செய்து 1971ம் ஆண்டு இலங்கை திரும்பினார்.

சமூக விடயங்களில் அலியார் ஹஸ்ரத் மிகுந்த ஈடுபாடு காட்டினார் அந்த வகையில் வடகிழக்கு முஸ்லிம் பேரவை என்னும் அமைப்புக்கு தலைமை தாங்கியதுடன் சம்மாந்துறையில் 1985ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மஜ்லிஸ் அஷ்சூறா சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு சுமார் 30 வருடங்கள் ஆர்வத்தோடு அர்ப்பணிப்போடு அப்பதவியை அழகுபடுத்தினார்.

சேகு தப்லீக் அலியார் ஹஸ்ரத் எழுத்துத்துறையிலும் அதிகம் விருப்பம் கொண்டவராக காணப்பட்டார் சந்தர்ப்ப துஆ வெளியீடு, இஸ்லாமிய நீதிமன்றம், நபி வழியில் நாம் வாழ்வோம், பெண்மணி பர்தாவின் கண்மணி ஆகிய 4 நுால்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

அலியார் ஹஸ்ரத் தன்னிகரில்லா அடையாளங்கள், பண்புகள் போன்றவற்றை தன்னகத்தே கொண்டிருந்தார். இறையச்சம் பேனுதல், அடக்கம், துணிவு, ஆதரிப்பு, பணிவு, பொறுமை மற்றும் குடும்ப உறுவுகளைப் பேணுதல் போன்ற இவரது பண்புகள் இவற்றுக்கு எடுத்துக் காட்டாகும்.

தனது இளம் வயதினில் மார்க்க பிரச்சார இயக்கங்களுல் ஒன்றான தப்லீக் ஜமாத்அத்தில் இணைந்து கொண்ட அவர் தனது அந்திம காலம் வரை உள்நாட்டில் பல பகுதிகளுக்கும் உலகளாவிய ரீதியில் பல நாடுகளுக்கும் சென்று மார்க்கப் பிரச்சார பணிகளில் இதய சுத்தியுடன் ஈடுபட்டிருந்தார்.

சிரமங்களுக்கு மத்தியில் சம்மாந்துறையில் தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியை நிறுவி சன்மார்க்கப் பணியில் அரும் பெரும் சேவையாற்றியுள்ளார். இஸ்லாமிய மார்க்க அறிவில் ஆழ்ந்த புலமை மிக்க இவர்கள் தமது மாணவர்களைத் தேர்ந்த அறிஞர்களாகவும் உயர்ந்த ஒழுக்க சீலர்களாகவும் ஆக்குவதில் மகத்தான பணி செய்து கொண்டிருந்தார். 

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது சமய, சமூக, கல்வி, கலாசார விவகாரங்களில் அவர் காட்டிய தியாகம், அர்ப்பணிப்புக்களை அங்கிகரீத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற மேலான சுவர்க்கத்தை அவருக்கு வழங்குவானாக.

ஆமீன்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment