பிரதேச சபையும் பிரதேச செயலகமும்.

அன்று ஒருகாலம் கல்முனையின் நிருவாகமானது  கரைவாகு வடக்கு மருதமுனை,பாண்டிருப்பு,நீலாவணை கரைவாகு தெற்கு சாய்ந்தமருது கரைவாகு வடக்கு சேனைக்குடியிருப்பு,நற்பிட்டிமுனை
,மணற்சேனை கல்முனை நகர் கல்முனைப்பட்டினம்,கல்முனைக்குடி ஆகிய உள்ளூராட்சிமன்ற பிரிவுகளாகவும் இவையனைத்தையும் சேர்ந்த ஊர்கள் அனைத்தையும் கல்முனைத் தேர்தல் தொகுதி எல்லைகளை உள்ளடக்கியதாக கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவாகவும் நிருவாக அலகாக காணப்பட்டது.

அதன்பின்னர் ஏற்பட்ட அரசியல் அதிகார பிரிப்புமுறை மாற்றத்தினால் கல்முனை நிருவாகப்பிரிவானது கல்முனைத் தமிழ் பிரதேச செயலகப் பிரிவாக மாறப்பட்டும் பின்னர் சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச செயலகமாகவும் மாற்றப்பட்டதுடன் கல்முனை உள்ளூராட்சி மன்றப்பிரிவானது கல்முனை பிரதேச சபையாகவும்,கல்முனை நகர சபையாகவும் பின்னர் மாநகர சபையாகவும் மாற்றமடைந்து இன்றுவரை காணப்படும் நிலையில் அண்மைக்காலமாக இப்பிரதேச மக்களிடையே ஓர் பிரிவினைக் கோட்பாடு காணப்படுகின்றது.

சாய்ந்தமருதுக்கான ஓர் சுதந்திர விடுதலை வேட்கை காணப்படுவதன் காரணம் என்ன?

அன்றைய ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தில் அங்கம்வகித்த கல்குடாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான கே.டபிள்யூ.தேவநாயகம் அவர்களிடம் பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கநாயகி பத்மநாதன் சென்று காதோடு காது வைத்தவாறு சலசப்பின்றி காரைதீவு,ஆலையடிவேம்பு பிரதேச செயலகங்களைப் பிரித்தெடுத்து இன்றுவரை சிறப்பாக நிருவாகம் செய்து வருவதையும் அதேபோன்று சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்ட பிரதேசத்திலிருந்து நாவிதன்வெளி,இறக்காமம் என்பன பிரிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றும் வருகின்றது.

இந்த சாய்ந்தமருது பிரதேச உள்ளூராட்சி சபை பிரிப்பின்போது சகோதர தமிழ் சமூகம் மௌனமாக இருக்கும் போது ஏன் இந்த சாய்ந்தமருது கல்முனை முஸ்லிம் மக்கள் அச்சப்படுவதன் அர்த்தமென்ன?


எஸ்.எம்.அமீர்
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment