வடகொரியா மீது பொருளாதார தடைவிதிக்க அமெரிக்க கொண்டு வந்த தீர்மானம் ஐ.நா வினால் நிறைவேற்றம்.


சியோல்:


உலக நாடுகளின் எதிர்ப்புகள் மற்றும் ஐ.நா சபையின் கட்டுப்பாடுகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது. குறிப்பாக கடந்த மாதத்தில் மட்டும் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இரண்டு முறை பரிசோதித்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகளுக்கான பாதுகாப்புக் குழுவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அதில், வடகொரியாவில் இருந்து நிலக்கரி, இரும்பு, மீன் வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வகையான ஏற்றுமதிகளின் மூலம் வடகொரியா 300 கோடி அமெரிக்க டாலர்களை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. இந்த தீர்மானம் ஐ.நா.வில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.ஐ.நா. சபையின் இந்த முடிவுக்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வடகொரியா கூறுகையில், ‘எங்கள் அணு ஆயுத சோதனைகள் பற்றி யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் எங்கள் முடிவிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். மேலும் அமெரிக்கா எங்களிடமிருந்து அதிக தொலைவில் இருப்பதால் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து கொண்டு இருக்கிறது. ஆனால் அது மிகப் பெரிய தவறு. இந்த முடிவில் அமெரிக்காவிற்கும் அதற்கு உடந்தையாக உள்ள நாடுகளுக்கும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment