உபி மருத்துவமனையில் மேலும் 6 குழந்தைகள் மரணம்!

கோரக்பூர் – உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூரில் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையின் காரணமாக, கடந்த வாரம் சிகிச்சையில் இருந்த 70 குழந்தைகள் மரணமடைந்தனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உபி அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

ஆனால், உபி அரசு ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதை மறுத்து, ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் செய்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தது.

இதனிடையே, அதே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 6 குழந்தைகள் மூளை பாதிப்பால் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment