மஹிந்தவின் பொதுஜன பெரமுனவின் கிழக்கு மாகாண அமைப்பாளராக மஷூர் மௌலானாவை நியமிக்க ஏற்பாடு!.

கலீல் எஸ் முஹம்மட்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த றாஜபக்ஸவின் ஏற்பாட்டில் ஒன்றினைந்த எதிர்கட்சியினரால் இணைந்து உருவாக்கபட்டுள்ள பொதுஜன பெரமுனவின் கிழக்கு மாகாண அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த றாஜபக்ஸவின் மத்திய கிழக்கு நாடுகளின் விவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்தவரும் இன நல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவருமான அஷ்ஷேஹ் அப்துல் காதர் மஷூர் மௌலானா நியமிக்கபடவுள்ளதாக ஸ்ரீறிலங்கா சுதந்திர கட்சியின் பாணந்துறை நகர சபை முன்னாள் தவிசாளர் இபாஸ் நஹ்பான் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த றாஜபக்சவுடன் கரம்கோர்த்து முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் சிறப்பாக அமைவதோடு குறிப்பாக கிழக்கில் திட்டமிட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துச்செல்ல முனைப்புடன் செயல்படும் அடிப்படையில் இப்பதவி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளின் தலைமைகளுடன் மிக நெருக்கமாக உறவுகளை கொண்டவரும் அறபு நாட்டுகளின் பெருமளவு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவருவதில் பெரும் பங்களிப்பு செய்துவரும் மஷூர் மௌலானாவின் வரவு மிகவும் வரப்பிரசாதமாக அமையும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment