ஏ.எம்.ஜெமீல் தலைமையில் ACMC குழுவினர் மத்திய முகாம் பிரதேசத்திற்கு விஜயம்.

மருதூர் ஜஹான்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான கெளரவ ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக கட்சியின் பிரதித் தலைவரும் மற்றும் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினருமான சகோதரர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஒன்றிணைந்து   கடந்த 29.07.2017 திகதி  சனிக்கிழமை மத்திய முகாம் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். 

இவ்வேலைத் திட்டங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய முகாம் முக்கியஸ்தர் ஹசன் ஹாஜியாரும், முன்னாள் மத்திய முகாம் SLMC பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஏ.லத்தீப் (நவாஸ்) அவர்களும் கலந்து கொண்டனர். மத்திய முகாம் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தரும் பிரபல வர்த்தகருமான அல்ஹாஜ் உமர்கத்தா அவர்களின் இல்லத்திற்கு விஜயம் செய்த குழுவினர் அவருடன் உரையாடிய போது தற்போது எமது மக்களின் முக்கிய விடயங்களை கவனிப்பதற்கும் குரல் கொடுப்பதற்கும் முஸ்லிம் காங்கிரஸினால் முடியாதிருப்பதையிட்டு கவலை தெரிவித்ததோடு மறைந்த தலைவர் மர்ஹும் அஸ்ரபின் இடைவெளியினை நிரப்புவதற்கு பொருத்தமானவரும் முஸ்லிம்களின் குரலாக திகழும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் ரிஷாட் அவர்கள்தான் என தெரிவித்தார். 

மேலும் பல இடங்களுக்கும், பள்ளிவாசல்களுக்கும் விஜயம் செய்து பள்ளிவாசல்களினதும் மக்களினதும், விளையாட்டு கழகங்களினதும் தேவைகளையும், இளைஞர்களின் தொழில்வாய்ப்புக்கள், யுவதிகளுக்கான தையல் பயிற்சி நெசவுக் கைத்தொழில் போன்றவையும்  தலைவரினது கவனத்திற்கு கொண்டு சென்று மிக விரைவில் செய்து தருவதாகவும் கூறப்பட்டது. மேலும் முஸ்லிம் காங்கிரஸினால் புறந்தள்ளப்பட்டுள்ள சில பிரதேசங்களுக்கு விஜயம் செய்தபோது, இங்கு கருத்துக் கூறிய மக்கள் கடந்த காலங்களில் சகோதரர் ஜெமீல் அவர்களால் வழங்கப்பட்ட தண்ணீர் வவுசர் மற்றும் பிற உதவிகளையும் நினைவூட்டல் செய்ததுடன் தற்போது  தாங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்கள் என்று  சில இடங்களுக்கான குடிநீர் விநியோகம் மற்றும் கொங்கிரிட் வீதிகளைக்கூட போடாமல் புறக்கணிக்கபட்டிருக்கிறோம் என்று அங்கலாய்த்தனர். மேலும் பெருந்திரளான மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கட்சியன் வளர்ச்சிக்கு முன்வந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும், இறுதியாக கட்சி புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக  குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment