இஸ்லாமிய அறிவுத் திறனை விருத்தி செய்யும் நோக்கில் இஸ்லாமிய அறிவுத் திறன் போட்டி.


எம்.ஜே.எம்.சஜீத்


மாணவர்களின் இஸ்லாமிய அறிவுத் திறனை விருத்தி செய்யும் நோக்கில் இஸ்லாமிய அறிவுத் திறன் போட்டி நிகழ்ச்சிகளை அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் இவ்வருடம்(2017) ரமழான் மாத்தில் நடாத்தியது. இப்போட்டிகளுக்கு பல பிரதேசங்களிலுமிருந்து நூற்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்கள் விண்ணப்பித்து கலந்து கொண்டனர்.

இதன் போது கிராஆத் போட்டி, அதான் ஒலித்தல், அரபு எழுத்தணிக்கலை, ஹதீஸ் மனனப் போட்டி, ஆரம்ப ஐந்து ஜூஸூக்குள் மனனப்போட்டி, பேச்சுப் போட்டி, அரபுக் ஹஸீதாப் போட்டி, துஆ மனனம் போன்ற போட்டிகள் இடம் பெற்றன.இப்  போட்டிகளில் வெற்றி பெற்ற 48 வெற்றியாளர்களுக்கும் பெறுமதியான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் தலைவர் என்.எம்.நஜாத் தலைமையில் கடந்த சனிக்கிழமை(05) அட்டாளைச்சேனை அரபா வித்தியாலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

எமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வருடங்களை கடந்து அல்லாஹ்வின் உதவியால் தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. எம் சமூகத்திற்கு தேவையான பல திட்டங்களை அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம்(ACMYC) காலத்திற்கு காலம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது என மக்கள் பேசுகின்றார்கள் ஆனால் உங்களின் பார்வைக்கு தென்படுகின்ற இந்த  ஒவ்வொரு திட்டங்களும்;  பலருடைய தியாகங்களினதும், முயற்சிகளினதும், ஆலோசனைகளினதும், நிதி உதவிகளினதும் வெளிப்பாடே ஆகும். இத்திட்டங்களுக்கு பல வகையிலும் உதவிகள் புரிந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று இவ்மைப்பின் தலைவர் என்.எம்.நஜாத் தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருமலை மாவட்ட நீதிபதி கௌரவ அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ், கௌரவ அதிதியாக அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், விசேட அதிதியாக அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்ஷான், மற்றும் அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப், அட்டாளைச்சேனை பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஏ.நஹ்பிஷா, எம்.எஸ்.றஜாயா, அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ.அன்சார், கண்ணியமிக்க உலமாக்கள், பெற்றோர்கள், இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment