அக்கரைப்பற்றில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை.

எம்.ஜே.எம்.சஜீத்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'ஸ்ரமிக்க சுரெக்கும' நடமாடும் சேவை நேற்று (21) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது.

நிலையான நாடு என்ற நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைக்கமைய புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் பேரில் இவ்வேலைத்திட்டம்  மாவட்டம் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையிலிருந்து சுமார்17 இலட்சம் போ், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ள போதிலும் அவா்கள் தொடா்பான போதிய தகவல்கள், அவா்களது தொழில் உறுதிப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விடயங்கள்,  தொழில் புரிந்துவரும் நாட்டில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடா்பில் போதிய தகவல்கள் இல்லாமலுள்ளன.இதற்கமைவாக புலம்பெயர் தொழிலாளர்களது பிரச்சினைகளை கண்டறிந்து அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன் பிரதேசங்கள் தோறும் சென்று தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

புலம்பெயா் தொழிலாளர்கள், எமது நாட்டின் முக்கிய வளமாகக் காணப்படுகின்றனா். இவா்களது உழைப்பின் மூலம் நாடு பெருமளவிலான அன்நிய செலாவணியை  வருமானமாகப் பெற்று வருகின்றது.

இவா்களது  பாதுகாப்பை உறுதி செய்வதும் இவா்களது சேவையையும், உழைப்பையும் சட்டத்துக்குட்பட்ட முறையில் மாற்றியமைத்து அவா்களது குடும்பத்தினருக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக அமைப்பதற்கு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு  பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஐ.ஏ.அமீர் அமைச்சின் உயர் அதிகாரிகள், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்திப் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment