அநுராதபுர துருக்கராகம முஸ்லிம் வித்தியாலயத்திற்கு 02 மாடிக்கட்டிடம்.

அநுராதபுர மாவட்டத்தின் ஹொரவபொதான தேர்தல் தொகுதியில், கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட துருக்கராகம கிராமத்தில் 10/07/1951 இல் ஆரம்பிக்கப்பட்ட 650 மாணவர்களைக் கொண்ட  அ/துருக்கராகம முஸ்லிம் வித்தியாலயத்தின் மிக நீண்ட காலமாக  முக்கிய பிரச்சினையாகக் காணப்பட்ட வகுப்பறைப் பற்றாக்குறைக்கான தீர்வு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் முடிவுற்றுள்ளது.

அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் முயற்சியின் பலனாக குவைட் நாட்டின் தனவந்தர் ஒருவரினால் அல் ஹிமா சமூகசேவைகள் நிறுவனத்தின் மூலம் அ/துருக்கராகம முஸ்லிம் வித்தியாலயத்திற்கு 02 மாடிக்கட்டடம் (25x90)  நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் (21/08/2017) இன்று இடம்பெற்றது.

இன் நிகழ்வில் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், அல்-ஹிமா சமூகசேவைகள் நிறுவனத்தின் செயலாளர் M.A.A. நூருல்லாஹ், A.R.M.Travels உரிமையாளர்  A.R.M. தாரிக் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் உற்பட பெற்றார்கள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

அஸீம் கிலாப்தீன் 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment