அதாஉல்லாஹ் எனும் ஆளுமையை தோற்கடிக்க வேறு வியூகங்களை அமைத்துக் கொள்ளுங்கள்.


2002 ம் மாண்டிலிருந்து தனது தலைமையை பாதுகாக்க ஹக்கீம் மேற் கொண்ட மிக தந்திரமான யுக்திகளில் பிரதானமானது முஸ்லீம் மக்களை பிரதேச ரீதியாக பிரித்தாளும் செயற்பாடாகும். அதே போன்று கட்சிக்குள் பல பிரிவுகளை உருவாக்கி காரணங்களை காட்டி தப்பித்து விடுவதுமாகும்.


அதாஉல்லாஹ் அமைச்சாராக இருந்த காலங்களில் முஸ்லீம் காங்கிரஸ் தலைமை தனது உள்ளூர் பிரகமுகர்களை வைத்து பிரதேச அபிவிருத்திகளை தடுத்து பின்னர் சில அபிவிருத்தி செய்யவில்லை என பிரதேசவாதத்தை தோற்றுவித்து அற்பதனமான அரசியல் சதி செய்தார்கள்.

இருந்த போதும் பல சவால்கள சந்தித்து அதாஉல்லா எனும் தலைமை பல அபிவருத்தி செயற் திட்டங்களையும் முன்னெடுத்தார்.

கடந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னர் மக்கள் உண்மை நிலையை உணர்ந்து தேசியகாங்கிரஸ் தலைமை யின் கரங்களை பலப்படுத்துகின்ற போது மீண்டும் முஸ்லீம் காங்கிரஸ் தலைமை தனது தந்திரோபாய வழி முறைகளில் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தொடர் பான அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தை இரண்டாக பிரித்து கல்முனை அக்கரைப்பற்று எனும் பிரதேச வாத்தை தோற்றுவிப்பதற்கான முயற்சிகளில் களம் இறங்கி உள்ளது.

இதை சாதகமான பயன்படுத்தி அக்கரைப்பற்று பிரதேச மக்களின் செல்வாக்கை பெற முடியாத அரசியல்வாதி இம் முறையும் அக்கரைப்பற்று மக்களை பிரதேச வாதிகளாக சித்தரித்து தனது வாக்குகளை பெற்றுக் கொள்ளவும் அறிக்கை விடுவதை காணக்கிடக்கிறது.

இவர்கள் எல்லோரும் ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

அக்கரைப்பற்று எனும் ஊர் அஷ்ரப் என்னும் தலைமையின் சவாலை அதாஉல்லாஹ் எனும் ஆளுமையின் வழிகாட்டலில் பிரதேசவாதத்தை தகர்த்தெறிந்ததை 1994 ம் மாண்டு இடம் பெற்ற பிரதேச சபை தேர்தல் வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று தங்களை பொதுநல விரும்பிகளாக காண்பிக்க முயலும் அரசியல்வாதிகள் அன்று தலைவருக்கெதிரான பிரதேசவாத சிந்தனை கொண்ட அணியில் இருந்தவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தங்களது சுயநல அரசியலின் கோமாளித்தனமான செயற்பாடுகளை மக்கள் காலகாலமாக அவதானித்து வருகிறார்கள்.

தயாகமே கல்முனையில் இருக்கும் இரண்டு பிராந்திய காரியாலயங்களை அம்பாரைக்கு மாற்றிய விடயத்தில் அதிகாரத்தில் இருக்கும் முஸ்லீம் காங்கிரஸ் தலைமையின் மீது மக்கள் வெறுப்படைந்த நிலையில் உள்ள போது முன்னர் பழி போடுவதை போன்று அதாஉல்லாஹ் தான் காரணம் என பழி போட முடியாதவாறு அவரும் அதிகாரத்தில் இல்லை. 

எனவே மக்களிடம் மீண்டுமொரு முறை பிரதேச வாத சிந்தனையை தோற்றுவிப்பதற்கான முயற்சிதான் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தை ஓர் அவசியமற்ற முறையில் மாற்றி இவ்வாறான செயல்பாடுகளில் அவர் ஈடுபடுவதாகும்.


ஆனால் அந்த சூழ்ச்சிகளெல்லாம் இம்முறை பழிக்காமல் போகும் இவ்வாறான செயற்பாடுகளை செய்து காட்டினால் பாருங்கள் எமது தலைவரின் சாணக்கியத்தை என போராளிகள் கூறுவார்கள் என பிற் போக்கான அரசியல் வாதிகள் நினைப்பது முட்டாள்தனமாகும்.


மக்களை முழுமையாக முட்டாள்களாக்கி பணத்துக்காகவும் அதிகார வெறிக்காகவும் முஸ்லீம் காங்கிரஸ் தலைமை நடந்து கொண்ட விதம் கடந்த தேர்தல்கள் மக்கள் மன்றில் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

எனவே கல்முனை அக்கரைப்பற்று என பிரதேசவாதம் பார்க்க இன்றைய இளைஞர்கள் தயாராக இல்லை என்பதையும் அவர்கள் நாம் இழந்து விட்ட எம் தலைவர்களால் காவு கொடுக்கப்பட்ட உரிமைகளை பெற இந்த சமுகத்திற்காக உண்மையாக இருந்த அதாஉல்லாஹ் வின் பக்கம் அலையென திரள்வார்கள் என்பதும் திண்ணம்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment