உங்கள் காரின் இருக்கையின் மேல் உள்ள ஹெட்-ரெஸ்ட்டின் நன்மைகள் பற்றி தெரியுமா..??

தகவலுக்கு நன்றி - சரவணா.
காரில் இருக்கும் வசதிகளில் முக்கியமானவைகளில் ஒன்று இருக்கையின் மேல் இணைக்கப்பட்டிருக்கும் ஹெட்-ரெஸ்ட்டும் (headrest) ஒன்று. பயணிக்கும்போது தலையை ஓய்வாக வைத்துக் கொண்டு செல்வதற்கு ஹெட்ரெஸ்ட் பயன்படுவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.
ஆனால், தெரியாத சில விஷயங்களை இந்த செய்தியில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இது ஒவ்வொரு கார் உரிமையாளருக்கும் பயனுள்ளதாக அமையும்.
பாதுகாப்பு கவசம். 
கார்கள் விபத்தில் சிக்கும்போது ஓட்டுனர் மற்றும் பயணியின் தலையை காக்கும் ஆயுதமாக ஹெட்ரெஸ்ட் பயன்படுகிறது. மோதலின்போது கழுத்து எலும்பு முறிவை தவிர்க்கும் விதத்தில் ஹெட்ரெஸ்ட்டுகள் பயன்படுகின்றன. இது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், தெரியாத சில தகவல்களையும் வழங்குகின்றோம்.

விபத்து. 

கார்கள் விபத்தில் சிக்கும்போது பவர் விண்டோ வேலை செய்யாமல் போகலாம். இல்லையெனில், கார் பூட்டிக் கொண்டு வெளியேற முடியாத நிலை ஏற்படலாம். அப்போது கண்ணாடியை உடைத்துக் கொண்டு காரிலிருந்து வெளியேறுவதே ஒரு வழியாக இருக்கும்.

அதுபோன்ற சமயத்தில் சுத்தியல், வலுவான இரும்பு ராடு போன்றவற்றை வைத்து கண்ணாடியை உடைக்க முடியும். ஆனால், பெரும்பாலும் இந்த கருவிகளை கையில் எடுத்துச் செல்வதில்லை. அதுபோன்ற சமயத்தில் உதவுவதுதான் ஹெட்ரெஸ்ட்.


உபாயம். 

ஹோண்டா அமேஸ் போன்ற ஒரு சில கார் மாடல்களை தவிர்த்து, பெரும்பாலான கார் மாடல்களில் ஹெட்ரெஸ்ட்டை தனியாக கழற்ற முடியும். ஆபத்து சமயங்களில் ஹெட்ரெஸ்ட்டை கழற்றி, அதிலிருக்கும் இரண்டு உலோக கம்பிகளை ஜன்னல் கண்ணாடிக்கும், கதவுக்கும் இடையில் ஒரு கம்பியை சொருகிவிடுங்கள்.

எளிது. 

ஹெட்ரெஸ்ட் கம்பியை சொருகிய பின்னர், ஹெட்ரெஸ்ட்டின் மேல்புற தலையணையை பிடித்துக் கொண்டு கீழ் பக்கமாக நெம்புவதற்கு முயற்சியுங்கள். ஒரே வினாடியில் காரின் ஜன்னல் கண்ணாடி எளிதாக உடைந்து துகள்களாக கொட்டிவிடும். அதன் வழியாக வெகு விரைவாக, எளிதாக வெளியேற வாய்ப்பு கிடைக்கும்.

ரகசியம். 

காரின் ஜன்னல் கண்ணாடிகள், விண்ட் ஷீல்டு போன்றவற்றை உள்பக்கத்திலிருந்து எளிதாக உடைக்கும் நுட்பத்துடன் வடிவமைக்கப்படுகிறது. எனவே, ஆபத்து சமயங்களில் இந்த உபாயத்தை மறவாதீர். ஹெட்ரெஸ்ட் இருக்கையுடன் இயைந்த கொடுக்கப்பட்டிருக்கும் கார்களில் கண்டிப்பாக சுத்தியல் போன்ற கருவியை காருக்குள் வைத்திருப்பது அவசியம்.

தண்ணீரில் மூழ்கும்போது. 

விபத்து சமயங்களில் மட்டுமின்றி, மழை வெள்ளம், ஆற்றுக்குள் பாய்ந்துவிடும்போதும் யோசிக்காமல் இந்த ஹெட்ரெஸ்ட்டை உடனே கழற்றிவிட்டு வெளியேற முயற்சிக்கவும். தாமதப்படுத்தினால் கார் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கும் ஆபத்து உள்ளது. அப்போது வெளியில் நீரின் அழுத்தம் காரணமாக, காரின் கதவுகளை திறக்க முடியாத நிலை ஏற்படும்.

விசேஷ கண்ணாடி. 

காரின் ஜன்னல் கண்ணாடிகளை ஹெட்ரெஸ்ட் கம்பியை வைத்து நெம்புகோல் போன்று பயன்படுத்தி உடைக்கும்போது கண்களை மூடிக் கொள்வது அவசியம். கண்ணாடி துகள்கள் கண்களில் படும் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், காரின் கண்ணாடிகள் பல துண்டுகளாக உடையாமல், துகள்களாக முழுவதுமாக உடைந்துவிடுவதும் உங்களை பாதுகாக்கும் அம்சம்தான்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment