மாகாணசபை தேர்தல் திருத்தச்சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல! - உயர்நீதிமன்றம் .

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்ட மூலம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல என சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். மேற்படி சட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சபாநாயகர் நேற்று சபையில் அறிவித்ததுடன் அரசியலமைப்பின் 121 (01) ம் உறுப்புரையின்படி மாகாண சபைகள் திருத்தம் எனும் சட்ட மூலத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனு தொடர்பிலேயே இவ்வறிவித்தலை விடுத்தார்.

மேற்படி சட்ட மூலம் தொடர்பான மனுவை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மனுதாரர் விரும்பவில்லை என நீதிமன்றத்துக்கு அவர் தெரிவித்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். மாகாண சபைகள் திருத்தம் சட்ட மூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்றும் அரசியலமைப்பின் (12/04) அத்தியாயத்திற்கிணங்க சமத்துவத்திற்கான உரிமை ஏற்பாடுகளுக்கு ஆதரவாக அமைந்துள்ளதென்றும் உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.



Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment