உள்ளுராச்சி மன்ற விடயத்தில் ஹக்கீம் மனோவோடு சேர்ந்து வெளியேறிருக்க வேண்டும்.

( ஹபீல் எம் சுஹைர் - HMS )

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பான வாக்குறுதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கயினால் வழங்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.  ஜனாதியின் இல்லத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பிறகே புதிய சபைகள் உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

மனோ கணேசன் தனது மக்களுக்கு வழங்கிய வழங்கிய வாக்குறுதி இழுத்தடிக்கப்படுவதை உணர்ந்து இடை நடுவில் வெளியேறிச் சென்றுள்ளார். அவர் மானமுள்ளவர். தமிழராக இருந்தாலும் தன் வாக்குறுதியை யாரையும் எதிர்க்க தயங்கவில்லை.

அமைச்சர் ஹக்கீம் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் எத்தனையோ வாக்குறுதிகளை வழங்கிவிட்டார். தேர்தல் முடிந்த கையோடு பெற்றுத் தருவேன் என்றார். அமைச்சர் ஹக்கீம் தன் வாக்குறுதியை காப்பாற்றுவதில் உறுதியானவராக இருந்திருந்தால் மனோவோடு சேர்ந்து வெளியேறி இருக்க வேண்டும். இது பற்றி அஅமைச்சர் ஹக்கீம் சிறிதேனும் வாய் திறக்காமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் ஹக்கீமுக்கு சிறிதும் அக்கரையில்லை என்பதை அறிய இதனை விட என்ன சான்று வேண்டும். எப்போது சாய்ந்தமருது மக்கள் அமைச்சர் ஹக்கீமை பலமாகவும் பகிரங்கமாகவும் எதிர்க்கின்றார்களோ அப்போது தான் அவர்கள் தாகத்தை தனித்து கொள்ள கூடியதாக இருக்கும்

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment