வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க நடவடிக்கை.

அரசாங்கம் நாட்டிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை மாவட்ட அடிப்படையில் பயிற்சியளித்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய கொள்கைள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு அதற்கான விண்ணப்பங்களை தற்போது கோரியுள்ளதுடன், விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 8ஆம் திகதியென குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசதுறையில் அல்லது தனியார் துறையில் இதுவரை ஏதேனும் சேவையில் (தொழில்) இணைந்திராத பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 - 35 வரை வயதுள்ள ஆண், பெண் இருபாலாரும் தீவில் எந்தப் பகுதியிலும் பணியாற்றக் கூடியதாக உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவாகும் பட்டதாரிகளுக்கு ஒரு வருட பயிற்சி வழங்கப்படுவதுடன், பயிற்சி நடைபெறும் கால கட்டங்களில் மாதமொன்றுக்கு 20,000 ரூபா மட்டும் கொடுப்பனவாக வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளர்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment