முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடிக்கான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பம்.

வாழைச்சேனை தொடக்கம் ஓட்டமாவடி வரையான  54 கிலோ மீற்றர் தூரத்திற்கு  உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம்  நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான  ரவூப் ஹக்கீமினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன,

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  இந்த குடிநீர்த்திட்டத்திற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

கல்குடா தொகுதி அமைப்பாளர் ரியால் உட்பட பலர் இது தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் இது தொடர்பில் வேண்டுகோள்களை விடுத்திருந்தமை குறிப்பிடததக்கது

பல ஆயிரம் ரூபா  பெறுமதியான இந்த குடிநீர்த்திட்டம் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது,

கடந்த  பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஏறாவூருக்கான ஜனாதிபதியின் விஜயத்தின் போது கிரான் தொடக்கம் ஓட்டமாவடி வாழைச்சேனை வரையான குடிநீர்த்திட்டமொன்றினை அங்குரார்ப்பணம் செய்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது,
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment