ஏறாவூர் சுற்றுலாத் தகவல் மையத்திற்கான அடிக்கல் நடும் விழா.

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியினால் நிர்மாணிக்கப்படவுள்ள  ஏறாவூர் சுற்றுலா தகவல் மையத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு 20.08.2015 அன்று இடம்பெற்றது.

இதன்போது சுற்றுலாத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க,ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம்.சுகாதாரப் பிரதியமைச்சர் பைசல் காசிம் மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நசீர்,விவசாயத் துறை அமைச்சர் க.துரைராஜசிங்கம்,மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாச கலப்பத்தி உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

அத்துடன் கிழக்கு மாகாண சுற்றுலாத் துறை பணியக அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சுற்றுலாத் துறைப்  பணியகம் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment