இலங்­கையின் முத­லா­வது ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் குழு நேற்று இரவு பய­ண­மா­னது.

அஸ்ரப் ஏ சமத்.

கட்­டு­நா­யக்க, பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து இரவு 9.05 க்கு சவூதி எயார் விமா­னத்­தி­லேயே முத­லா­வது யாத்­தி­ரி­கர்கள் குழு பய­ண­மா­னது. இக்­கு­ழுவில் 148 யாத்­தி­ரி­கர்கள் சவூ­திக்கு சென்றனர்.

இவர்­களை முஸ்லிம் சமய விவ­காரம், தபால் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் மற்றும் முஸ்லிம் சமய திணைக்­கள பணிப்­பாளர், ஹஜ்­குழு உறுப்­பி­னர்கள், அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளிட்டோர் விமான நிலை­யத்­திற்கு சென்று வழி­ய­னுப்பி வைத்தனர் .
சவூதி நேரப்­படி நள்­ளி­ரவு 12.30 மணிக்கு ஜித்தா விமான நிலை­யத்தை அடையும் இலங்கை யாத்­தி­ரி­கர்­களை சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்கை தூதுவர் அஸ்மி தாஸிம், பதில் கவுன்­ஸிலர் ஜெனரல் எஸ்.எல்.கே. நியாஸ், மொழி­பெ­யர்ப்பு அதி­காரி நளீர் உள்­ளிட்டோர் வர­வேற்கயுள்ளனர்.

அத்­துடன், இரண்­டா­வது யாத்­தி­ரி­கர்கள் குழு ஸ்ரீ லங்கன் எயார்லைன் மூலம் மறுநாள் திங்­கட்­கி­ழமை 7 ஆம் திகதி 90 பய­ணி­க­ளுடன் செல்­ல­வுள்­ளது. அதே தினத்தில் ஒமான் எயாரில் 29 பேரும் சவூதி எயாரில் 160 பேரும் பய­ணிக்­க­வுள்­ளனர். 8 ஆம் மற்றும் 9 ஆம் திக­தி­க­ளிலும் பல விமா­னங்கள் மூலம் யாத்­தி­ரி­கர்கள் பய­ணிக்­க­வுள்­ளனர்.

இதே­வேளை, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள் மற்றும் வைத்­தி­யர்கள் அடங்­கிய ஹஜ் குழு உறுப்­பி­னர்கள் அடங்­கிய குழு 10 ஆம் திகதி பய­ணிக்­க­வுள்­ளனர்.

முதற்­கட்­ட­மாக 6 ஆம் திகதி முதல் 17 ஆம் திக­தி­வரை பய­ணிக்­க­வுள்­ளனர். இரண்டாம் கட்ட பய­ணிகள் 18 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை சவூ­திக்கு செல்­ல­வுள்­ளனர். இரண்டாம் குழு­வுடன் 180 ஆம் திகதி ஹஜ் குழு தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் மலிக், உள்­ளிட்­டோரும் செல்­ல­வுள்­ளனர்.

24 ஆம் திகதி ஹஜ் குழு உறுப்­பி­னர்­க­ளான எம்.எச்.ஏ.பாஹிம், சட்­டத்­த­ரணி சிராஸ்­நூர்தீன் மற்றும் திணைக்­கள அதி­கா­ரி­களும் பய­ணிக்­க­வுள்­ளனர். 24 ஆம் திக­தி­முதல் 27 ஆம் திக­தி­வரை மூன்­றாம்­கட்ட யாத்­தி­ரி­கர்கள் சவூ­திக்கு செல்­ல­வுள்­ளனர்.

இத­னி­டையே முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் எதிர்வரும் 26 ஆம் திகதி சவூதிக்கு செல்லவுள்ளார். அத்துடன் இம்முறை ஹஜ் குழுவில் ஐந்து வைத்தியர்கள் அடங்குகின்றனர். 2017 ஆம் ஆண்டு ஹஜ் கடமைக்கு இலங்கைக்கு 2840 கோட்டா கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment