ஆசிரியை றிபாயா சலீம் எழுதிய ” வாழ்க்கைக்கு வழிகாட்டி“ நுால் வெளியீட்டு வைபவம்.

(அஷ்ரப் ஏ சமத்)

தெஹிவளை பெசிபத்தேரியன் மகளிா் பாடசாலை, மற்றும் தெஹிவளை அலித்தியா சர்வதேச பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியை றிபாயா சலீம் ஆங்கில மொழி மூலம் எழுதிய ” வாழ்க்கைக்கு வழிகாட்டி  ”கைட் ரு லைப்” எனும் நுால் வெளியீட்டு வைபவம் நேற்று(5) தெஹிவளை அலித்தியா சர்வதேச பாடாசலையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கொழும்பு சாஹிரா முன்னாள் அதிபா் ஜக்கிய நாடுகள்  அபிவருத்தி திட்டத்தின் முன்னாள் பணிப்பாளா் கலாநிதி உவைஸ் அஹமட் கலந்து கொண்டாா். நுாலசிரியரிடமிருந்து முதற்பிரதியை கலாநிதி உவைஸ் பெற்றுக் கொண்டாா். அத்துடன் நுாலசிரியையின் புதல்விகள் ருபாய்  வங்கியாளா் ருமைசா,  மற்றும் கட்டாா் நாட்டின்  றிப்கா் கல்வி நிலையத்தின் பணிப்பாளா் றிப்கா பெரோஸ் ஆகியோறும் நுாலின்  விசேட பிரதிகளைப் பெற்றுக் கொண்டனா்.இந் நிகழ்வில் ஓய்வுபெற்ற ஆசிரியைகள் முஸ்லிம் பெண் விரிவுரையாளா்கள், வைத்தியா்கள் என பலா் கலந்து கொண்டனா் . இந் நுால் ஆங்கில மொழி மூலம் இஸ்லாமிய கல்வியைக் கொண்டு சிறந்த ஒரு வாழ்க்கை அமைப்பதற்கு தேவையானதொரு சிறந்த  வழிகாட்டி விடயதானங்களை ஆதாரம் காட்டி  ஆசிரியை  இந்   நுாலில் எழுதியுள்ளாா்.Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment