ஹரீஸ்-பைசல்காசீம்-மன்சூர் போன்றோரை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் தலைவரே..!

அம்பாரை தொகுதியில் மூன்று எம்பிக்கள் இருக்கின்றார்கள் இவர்களின் வேலை என்ன, தனது தொகுதிகளில் இருக்கும் பிரச்சினைகளை இனம்கண்டு அதற்கு அனுக வேண்டியவர்களிடம் அனுகி பல அமைச்சர்களை இங்கே அழைத்து வந்து சேவையை செய்வதுதான் அவர்களுடைய கடமை.

ஆனால் தங்களுடைய தொகுதியில் கக்கூசி கட்டுவதற்கு கூட ஆலோசனை கூட்டம் போடுவது என்றாலும் சரிதான், சேவை செய்வது என்றாலும் சரிதான், அதனை திறப்பது என்றாலும் சரிதான் தலைவர்தான் அதற்கு வரவேண்டும் என்று நினைப்பதென்பது இவர்களை இவர்களே தாழ்த்திக்கொள்வதற்கு சமமாகும்.

உதாரணத்துக்கு, கல்முனை அபிவிருத்தியை பற்றி தலைவர் ஹக்கீமுக்கு தெறிவதைவிட ஹரீஸ் எம்பி அவர்களுக்கு நன்றாகவே தெறியும், அவரை சதந்திரமாக இயங்கவிட்டால் பல அமைச்சர்களை இங்கே கொண்டுவந்து சேவைகளை செய்வார், அதனூடாக பல அபிவிருத்திகளை மக்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக அமையும்.

ஆனால் இங்கே நடப்பது என்ன?

ஹரீஸ் எம்பியும் மற்ற எம்பிமாரும் ஒரு குழந்தை மாதிரியும் தலைவர்தான் அவருக்கு வழிகாட்டுவது மாதிரியும் சகலதுக்கும் அவர்தான் வரவேண்டும் என்றும் நினைப்பதும் இந்த ஊர் மக்களுக்கு செய்யும் பெறுத்த அநியாயமாகும்.

ஹரீஸ் எம்பி அவர்களையோ மற்ற எம்பிமாரையோ சுதந்திரமாக இயங்க விட்டால் நிச்சயமாக அவர்களுடைய பதவியை பயன்படுத்தி, பல துறைசார்ந்த அமைச்சர்களை இங்கே அழைத்துவந்து சேவைகளை செய்வார் என்பதே உண்மையாகும். தங்களுடைய அமைச்சிக்குள் மட்டும்தான் அம்பாரை மாவட்டம் முழுக்க சேவை செய்யவேண்டும் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் இருக்கவே முடியாது.

பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களோ அல்லது தலைவர் ஹக்கீம் அவர்களோ தங்களிடமுள்ள அமைச்சிகளினூடாக முழு இலங்கைக்கும் சேவை செய்வேண்டும் என்று கூறுவது உண்மையாக இருந்தால், ஏன் மற்ற துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களின் சேவை நமக்கு கிடைக்காமல் இருக்கின்றது என்று இந்த மக்கள் யோசித்து பார்த்தார்களா?

ஏன் மற்ற அமைச்சர்கள் இங்கே அழைத்து வரப்படுவதில்லை என்று பார்த்தால், நான் கூறும் காரணம்தான் அதற்கு காரணமாகும்.

தன்னுடைய கட்சியையும் அதன் மூலம் பெற்றுள்ள தலைவர் பதவியையும் காப்பாற்றுவதற்காக அவர் ஆடும் நாடகத்துக்கு நமது பகுதி மக்கள் பழியாகின்றார்கள், இதனை தெறிந்து கொண்டும் நமது எம்பிமார் பேசாமல் இருக்கின்றார்கள் என்பதே உண்மையாகும்.

நிர்வாகம் செய்வதற்கு ஹரீஸ், பைசல் காசிம், மன்சூர் போன்றோருக்கு தெறியாத ஒன்றல்ல அவர்களும் படித்தவர்கள்தான், எப்படி ஹக்கீம் அவர்கள் இந்த கட்சி தலைவராக வருவதற்கு முன் இருந்தாரோ அதைப்போன்றுதான் இவர்களும் அனுபவத்தினூடாக அரசியலை கற்றவர்கள்.

இவர்களை சுயமாக இயங்கவிட்டால் நிச்சயமாக பல அபிவிருத்திகளை நமது பகுதி அடையும் என்பதே உண்மையாகும். சரி, இப்படி நடப்பதற்கு காரணம் என்ன என்று பார்த்தால்...தலைவருக்குள் உள்ள பயம்தான் காரணமாகும்.

இந்த கட்சியிலே இருந்த அதாவுள்ளா, ஹிஸ்புள்ளா, ரிசாட், அமீரலி, மறைந்த அன்வர் இஸ்மாயில் போன்றவர்கள் கட்சியில் இருக்கும் போதும் தனது பகுதிகளுக்கு தன்னிச்சையாக இயங்கி பல சேவைகளை செய்தவர்கள், அதன் காரணமாக கட்சியை விட்டு பிரிந்து சென்றாலும் அந்தந்த பகுதியை மக்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துக்கொண்டார்கள் என்பதை நாம் அறிவோம்.

இப்படியொரு தவறு இனிமேலும் நடக்கக்கூடாது என்ற பயத்தின் காரணமாகவும், கல்முனை தொகுதியும் பறிபோய்விடக்கூடாது என்ற காரணத்தாலும் இவர்கள் யாரும் தன்னிச்சையாக இயங்குவதற்கு தலைவர் அனுமதிப்பதில்லை,

அப்படித்தான் அவர்கள் தன்னிச்சையாக இயங்க முடிவெடுத்து செயல்பட்டால் தொகுதி அபிவிருத்தி அடையும் ஆனால் அவர்களுக்கு அடுத்தமுறை கட்சியில் சீட் கிடைக்காது இதுதான் உண்மையாகும். (உதாரணம் முன்னால் மேயர் சிராஸின் பதவி பறிப்பு)

இந்த உள்நோக்கத்தை வைத்துத்தான் தலைவர் அவர்கள் செயல்படுகின்றார் என்பது அம்பாரை மாவட்ட மூன்று எம்பிமாருக்கும் தெரியும், அவர்களுக்கு தொகுதியின் அபிவிருத்தியை விட தலைவரின் மனம் நோகக்கூடாது என்பதில்தான் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள்.

அதற்காகத்தான் கக்கூசி திறப்பதென்றாலும் தலைவர் வரவேண்டும் என்று அவர்கள் துடியாய் துடிக்கின்றார்கள். இது அவர்களின் தவறல்ல, மாறாக மக்களின் அறியாமை என்பதே உண்மையாகும். முஸ்லிம் காங்கிரஸில் வந்தால்தான் மக்கள் வோட்டுபோடுவார்கள் என்ற நிலை இருக்கும் போது அவர்கள் எதனை குறிவைப்பார்கள் என்று குழந்தைப் பிள்ளைக்கும் தெறிந்த விடயம்தான்.

தலைவரை மீறி இங்கே செயல்பட்டுவிட்டு இதன் காரணமாக அவர் கட்சியை விட்டு நீக்கிவிட்டால் பிறகு மக்களிடம் வந்தால் தோல்விதான் மிஞ்சும், அதை விட தலைவரின் மனம் நோகாமல் நடப்பதே மேல் என்று அவர்கள் செயல்படுவது தவறாகாது.

இவர்களுடைய இந்த போட்டியினால் பாதிக்கப்படுவது யார்?  என்பதை மக்கள் அறிந்ததாகவும் தெறியவில்லை, அதனால் பாதிக்கப்படுவதும் நாம்தான் என்றும் மக்களுக்கும் புரியவில்லை.

ஆகவே மக்களே சுதந்திரமாக இயங்கக்கூடிய ஒரு எம்பியை தெரிவு செய்யுங்கள் நிச்சயமாக பல அபிவிருத்திகள் நமது பகுதியை அலங்கரிக்கும் என்பதே நிச்சயமானதும் சத்தியமான உண்மையுமாகும் என்பதே எங்கள் கருத்தாகும்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment