ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் பிராத்தனையுடன் நல்லடக்கம் ஆனார் அலியார் ஹஸ்ரத்.

நூறுவீதம் இஸ்லாமியனாக வாழ்ந்து பல ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் பிராத்தனையுடன் ஒரு உலகில் இருந்து மறு உலகுக்கு பயனித்தார் அலியார் ஹஸரத்.

தனக்காக வாழாமல் இந்த தீனை முழு உம்மத்துக்கும் பரப்பும் நோக்கில் அடித்தளம் இடப்பட்டதேதப்லீக்குல் இஸ்லாம் என்னும் அறிவு பட்டணம்இந்த நாட்டில் இருக்கும் அதிமான ஆலிம்கள்அவரின் மாணவர்களே.

மக்களை மதிக்கும் பண்பு யாருடைய உள்ளமும் உடையாமல் அனைவரையும் மதித்து நடந்தமானிட நேயர் அல்லாஹ் அவர்களை உயர்வான ஜன்னத்துல் பிர்தெளஸை வழ்குவானாக ஆமீன்

சம்மாந்துறை மண்ணை சமூக ரீதியாகவும் சன்மார்க்க ரீதியாகவும் தலைநிமிரச் செய்தாலும் முழு அம்பாரை மாவட்டத்திற்கே பெருமைதேடித்தந்த பெரியார் ஹஸரத்துக்கே பெரும் பங்குள்ளது. குறிப்பாக தப்லீக் ஜமாஅத்தின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கிழக்கு மாகாணத்தில் தப்லீக் ஜமாஅத் வளர்ச்சிபெற பெரும்பாடுபட்ட ஒருவர்.


சிரமங்களுக்கு மத்தியில் சம்மாந்துறையில் தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியை நிறுவி சன்மார்க்கப் பணியில் அரும் பெரும் சேவையாற்றியுள்ளார்.

அரசியல் தலைமைத்துவங்களுடன் எப்போதும் நெறுக்கமான உறவைப் பேணிய அவர், அதன் ஊடாக சமூகத்தின் ஒற்றுமை – அபிவிருத்திக்கு அதிக பங்களிப்பு செய்துள்ளார்.

சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கலாபீட ஸ்தாபகர் அலியார் ஹஸரத் அவர்களின்ஜனாஸா நல்லடக்கம் நேற்று இரவு பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment