ஊழியரை தாக்கிய IGB மீது பாயாத சட்டம் என் மீது பாய்கிறது!



ஊழியர்கள் இருவரை தாக்கும் பொலிஸ் மா அதிபர் தொடர்பில் எதுவித நடவடிக்கையும்  எடுக்காத சட்டம், நான் பொலிஸ் உத்தியோகத்தர்களை மிரட்டியதாக, என் மீது நடவடிக்கை எடுக்க துடிப்பது வேடிக்கையானதுஎன ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

கம்புறுப்பிட்டியவில்இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்  உரையாற்றி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..

எங்களை எதிலாவது மாட்டிவிடுவதற்கு இவ்வாட்சியாளர்கள் மிகவும் சிரத்தை எடுத்து கொண்டிருக்கின்றனர். எங்கள் மீது மலையளவு குற்றச் சாட்டுக்களை முன் வைத்தவர்களுக்கு எங்களை கைது செய்ய துரும்பளவான விடயம் கூட கிடைக்கவில்லை. தற்போது நான் பொலிஸ் அதிகாரியை மிரட்டியதாக கூறி என்னை கைது செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதனைவைத்தாவது எங்களை அடிபணியச் செய்துவிடலாம் என இவ்வாட்சியாளர்கள் பகற் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் ஊழியர்கள் இருவரை தாக்கிய பொலிஸ் மா அதிபர் மீது எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு ஆதரமாக தெளிவான காணொளி சாதாரணமாகவே சமூக வலைத் தளங்களில் பரவியுள்ளது. இது குறித்து கருத்துரைத்துள்ள பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை ஒரு சாதாரண சம்பவமாக கூறியுள்ளார். எனினும், நான் ஒரு பொலிஸ் அதிகாரியை மிரட்டியதான குற்றச் சாட்டை  முன் வைத்து, அதனை பாரிய குற்றமாக வர்ணித்து என்னை கைது செய்ய முயற்சிக்கின்றார்கள்.


தங்களது தேவைகளை நிறைவு செய்யவும் தங்களுக்கு விரோதமானவர்களுக்கு மாத்திரமே சட்டம் நிலை நாட்டப்படும்.இது தான் இன்று நீதியை நிலை நாட்ட வந்த நல்லாட்சியில் நீதி நிலைநாட்டப்படும் விதமாகும்.இவ்வாறான போலி குற்றச் சாட்டுக்களுக்கு அஞ்சி ஒளிபவர்கள் நாங்கள் அல்ல என்பதை இவ்வாட்சியாளர்களுக்கு தான் கூறிக்கொள்ள விருப்புவதாக தனது உரையில் தெரிவித்திருந்தார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment