எத்தனை உண்மைக்குப் புரம்பான செய்திகள் வந்தாலும் சம்மாந்துறை மாணவ-மாணவிகள் கல்வியில் சாதிப்பர்.

(எம்.எம்.ஜபீர்)

அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரசேத்தில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய  முஸ்லிம் மாணவி ஒருவர் புளுத் டுத் ஹெட் செட்டுடன் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யான செய்தி எனவும், இது முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக வேண்டுமென்றே மேற்கொண்டு வருகின்ற சதித்திட்டமுமாகும். இவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறாத நிலையில் வேண்டுமென்றே  உண்மைக்கு புறம்பாக கட்டவிழ்த்து விடப்படும் பொய்யான செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் உள்ள முக்கிய பாடசாலை ஒன்றில் நேற்று (11) உயர்தர பரீட்சைக்காக முஸ்லீம் மாணவி ஒருவர் பாடத்திற்கு தோற்றி இருந்தார். இந்நிலையில் குறித்த மாணவி தனது உடலை முழுவதும் மறைக்கும் படியாக முஸ்லீம் கலாச்சார உடையுடன் (அபாயா) அணிந்து வந்திருந்தார் எனவும்,புளுத் டுத் ஹெட் செட் உதவியுடன் உயர் தர பரீட்சையை எழுதிய முஸ்லீம் மாணவி கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

என்ற வகையில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பாக சித்தரிக்கப்பட்டு முஸ்லிம் மாணவிகளை நிந்திக்கும் வகையில் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருவது தொடர்பாக சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எச்.உப்புல் பியலால் ஆகியோருடன் தொடர்பு கொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் கேட்டபோது சம்மாந்துறை வலயக் கல்வி பிரதேசத்தில் 6 பரீட்சை நிலையங்களில் உயர் தரப் பரீட்சை இடம்பெறுவதாகவும் இன்று வரை இவ்வாறான எந்த ஒரு சம்பவமும் இடம்பெறவில்லை எனவும் சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர் ஆகியோர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

இவ்வாறாக வேண்டுமென்று திட்டமிட்ட அடிப்படையில் சம்மாந்துறை பிரதேச மாணவர்களை குறிப்பாக முஸ்லிம் மாணவிளை அவமானப்படுத்துவதன் ஊடாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினையும் அவமானப்படுத்தி இனங்களுக்கிடையே இனமுறுகல்களை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் சதிமுயற்சியாகும். இவ்வாறு பொய்யான செய்தியை மக்களுக்கு வழங்கி ஒற்றுமையாக வாழும் சமூகங்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் இணையத்தளயங்களின் செயற்பாடுகளை முடக்குவதற்காக குற்றப் பிரிவில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த பல வருடங்களாக  சம்மாந்துறை பிரதேசத்தில் கல்வி வளர்ச்சி கண்டு வருவதுடன் மருத்துவ துறைக்கு அதிகமாக மாணவ, மாணவிகள் சித்தியடைந்து பல்கலைக்கழகம் சென்றதை சகித்து கொள்ள  முடியாத ஒரு சிலர் அனைத்து மாணவர்களுக்கும் அவமானத்தினை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கும் செயற்பாடாக கருதுவதுடன்  இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

எமது சம்மாந்துறை மாணவர்களுக்கு இவ்வாறான அழுத்தங்களை கொடுத்து அவமானப்படுத்த முயற்சி செய்தாலும் சம்மாந்துறை மாணவர்கள் மாத்திரம் அல்ல முஸ்லிம் மாணவர்கள் அத்தனை தடைகளையும் தாண்டி இவ்வருடமும் கடந்த வருடத்தைவிட அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வார்கள் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment