ராஜித சேனாரத்தின அவர்களின் அறைகூவல் எதனை சுட்டிக்காட்டுகிறது....!

அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமா ? எம்மிடம் கேளுங்கள் சொல்லித்தருகின்றோம் என்கிறார் ராஜித சேனாரத்தின....!


அன்று நானும் எனது குழுவினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை நேரில் சந்தித்திருந்தோம், அப்போது நாங்கள் எழப்பிய கேள்விகளுக்கு பதில் தந்திருந்தார், அந்த நேரத்தில் ஒருகட்டத்தில் எனது ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு ராஜித சேனாரத்தின போன்றவர்கள்தான் உள்ளிருந்து கொண்டு இதற்கு சதி செய்தவர்களில் ஒருவர் என்று குறிப்பிட்டார்.

அளுத்கம பிரச்சினை நடக்கும் போது நானும் (மஹிந்த), பசீலும் கோத்தாவும் நாட்டில் இருக்கவில்லை, அந்த நேரம் பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருந்தவர் இன்றய ஜனாதிபதி மைத்திரி அவர்கள்தான் இருந்தார் என்றும், அவர் நினைத்திருந்தால் அன்று இந்த பிரச்சினையை உடனே அடக்கியிருக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.

வெளிநாட்டு பயணத்தை இடையில் முடித்துக்கொண்டு வந்த நான்(மஹிந்த)உடனடியாக சென்றது அளுத்கமைக்குத்தான், அங்கே சென்ற நான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்கினேன், இருந்தாலும் உள்ளிருந்து கொண்டே இவர்கள் சதி செய்தார்கள் என்பதை நான் அறியாதது உண்மைதான்.

இருந்தாலும் இவர்களை நான் நம்பியிருந்தேன், இவர்கள் பல நாட்களுக்கு முன்னமே என்னை வீழ்த்துவதற்கு திட்டமிட்டு செயல்பட்டார்கள் என்ற விடயத்தையும் நான் அறிந்திருக்கவில்லை.


ஜனாதிபதி தேர்தலின் போது எனக்கு எதிராக இன்றய ஜனாதிபதி மைத்திரி அவர்கள் வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை, அதே நேரம் அவர் ஒரு நாளில் எடுத்த தீர்மானமாகவும் அது இருக்கவும் முடியாது, மாறாக பல நாட்களுக்கு முன்னமே மிக ரகசியமாக இந்த தீர்மானத்தை எடுத்து செயல்படுத்தியுள்ளார்கள்.

என்னோடு கூட இருந்து சிரித்து சிரித்து அப்பம் சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் எனக்கு எதிராக போட்டியிட்டவர்களை இனம்கான நான் தவறியது எனது தவறுதான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.


இப்படிப்பட்ட இவர்கள்தான் அரசியல் லாபத்துக்காக முஸ்லிம்களையும் என்னையும், எனது ஆட்சியையும் வீழ்த்துவதற்கு உள்ளிருந்துகொண்டே முயற்சி செய்து வந்தவர்கள் ஆவார்கள்,இவர்கள் அளுத்கம பிரச்சினையை ஊதி பெருப்பித்துவிட்டு அதனை தங்களுக்கு சார்பாக பயன்படுத்திகொண்டவர்கள், இவர்களா முஸ்லிம்களுக்கு நியாத்தை பெற்றுத்தறுவார்கள் என்று யோசியுங்கள் என்றும் எங்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவர்கள் கேள்வி எழப்பினார். 


அவருடைய இந்த கேள்விக்கு பதில் தருவது போன்றே இன்று ராஜித சேனாரத்த அவர்கள் அனுராதபுரத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது மேற்கூறிய இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ஆட்சியிலிருக்கும் ஒரு அரசாங்கத்தை அசைக்க வேண்டும் என்றால் அதை எவ்வாறு செய்யவேண்டும் என்பதை எம்மிடம் கேளுங்கள், அரசாங்கத்தை எவ்வாறு திட்டமிட்டு மாற்றுவது என்பதை நாங்கள் சொல்லித்தறுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய இந்த கூற்றுக்குள் ஆயிரம் உண்மைகள் புதைந்து கிடக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இவர்களுடைய சதி நாடகத்துக்கு முஸ்லிம் சமூகத்தை பழியாக்கியுள்ளார்கள் என்பதே உண்மையாகும்.


ஆகவே முஸ்லிம் மக்களே இதனை ஆழமாக சிந்தித்து பாருங்கள் உண்மை புரியும், எதிரி யார் நண்பன் யார் என்று நாம் புரிந்து கொள்ளாதவரை ஏமாற்றியவர்களின் காட்டில் மழைதான்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment