காரைதீவு பொலிஸ் போஸ்ட் நடமாடும் சேவை நிகழ்வின் நிறைவு விழா.


பொலிஸ் பரிசோதகர் MS அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்று வந்த சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள காரைதீவு பொலிஸ் போஸ்ட் நடமாடும் சேவை நிகழ்வின் ஒரு மாத காலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு கலை, கலாசார நிகழ்ச்சியுடன் இசை நிகழ்ச்சியும் நேற்று (2017-08-29) நடைபெற்றது. இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கலந்து சிறப்பித்தார்.

பொலிஸ்மா அதிபரின் வேண்டுகோளுக்கினங்க இலங்கை மக்களின் பாதுகாப்பையும் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக இன்னும் 600 போலிஸ் நிலையங்கள் திறக்கப்பட இருக்கின்றது. அதில் காரைதீவு மற்றும் நிந்தவூர்களுக்காக இரண்டு போலிஸ் நிலையங்களும் அதற்குறிய சகல தளபாடப் பொருட்களும் ஒதுக்கப்பட்துள்ளது இருந்தபோதிலும் காரைதீவு பிரதேசத்தில் பொருத்தமான இடம் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளதால் பொதுமக்களாகிய உங்களின் சொந்த இடமாக இருப்பினும் அதை 5வருடகால ஒப்பந்த அடிப்படையில் தருவதற்கு முன்வருவீர்களானால் அந்த உரிமையாளருக்கு மாதாந்த நல்ல குத்தகை பணம் வழங்குவதோடு மக்களுக்கான சிறந்த சேவைகளையும் எங்களால் வழங்க முடியும் என பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.பிரதேச மக்களாகிய நீங்கள் விடுமுறைக்காக செல்லும் இடமல்லாம் குடும்பத்தோடு நின்று வர்ண புகைப்படங்களைப் பிடித்து சமுக வலைத்தளங்களில் போடுவதனால் கள்வர்களுக்கு தங்களின் வீட்டில் வந்து கொள்ளையிட்டு செல்லும் படி அழைப்பிதல் கொடுக்கின்றீர்கள். அவ்வாறான செயல்பாட்டை உடன் நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்வுக்கு உலமாக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் காரைதீவு,மாளிகைக்காடு,மற்றும் மாவடிப்பள்ளி மக்களன பெருந்திரளானோர் சமுகமளித்திருந்தனர்.


.நன்றி யாஸ்தீன்JP
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment