காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் மாபெரும் இரத்ததான முகாம்.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் நடாத்தப்படும் நடமாடும் பொலிஸ் சேவையின் ஓர் அங்கமாக 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' எனும் தொனிப் பொருளில் மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம் 16-08-2017 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சி தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரீ.மகேஸ்வரன் தெரிவித்தார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து இடம்பெறும் இம் மாபெரும் இரத்ததான முகாமில் இரத்ததானம் செய்வதற்கு விருப்பமுடைய இளைஞர்,யுவதிகள்,பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது இரத்தத்தை தானமாக வழங்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment