நன்றி மறக்காத மஹிந்த ! சுகயீனமுற்றுள்ள தனது நண்பரை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை பேருவளைக்குவிஜயம் செய்திருந்த நிலையில் பேருவளையில் நடைபெற்ற பல்வேறுநிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தார்.

முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் ஊடக பணிப்பாளர் ஆஸப் அஹமட்அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பகல் விருந்து உபசாரத்தில் கலந்துகொண்டஅவர் அதனை தொடர்ந்து தற்போது சுகயீனமுற்றுள்ள சீனன் கோட்டையைச் சேர்ந்தபிரபல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளரான முகம்மது ரவூபின் இல்லத்திற்குசென்று சுகம் விசாரித்தார்முன்னாள் பேருவளை நகரபிதா மர்ஜான் அஸ்மி பளில்உட்பட பல பிரமுகர்களும் முன்னாள் ஜனாதிபதியுடன் வருகை தந்தனர். 

 பேருவளை முன்னாள் நகர பிதாவும் பேருவளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னாள்அமைப்பாளருமான மர்ஹும் எம்.எஸ்.எம்பளில் ஹாஜியாருடன் இணைந்துதேர்தல் காலத்தில் தனது வெற்றிக்காகவும் கட்சியின் முன்னேற்றத்ற்காகவும்முகம்மது ரவூப் செய்த பங்களிப்பை இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஞாபகமூட்டினார் .

நோய்வாய்ப்பட்டுள்ள தன்னை சந்தித்து சுகம் விசாரிக்க , தனது இல்லத்திற்குவிஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முகம்மது ரவூப்இதன்போது நன்றி கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக பிரதேசத்தைச் சேர்ந்தமுஸ்லிம்கள் சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment