எமது தாய் திரும்பி வரவேண்டும்! மஹிந்தவின் மனைவிக்காக திரண்ட மக்கள்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையான ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு ஆதரவாக பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னதாக திரண்ட மக்கள் பல கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“எமக்கு மஹிந்த அரசு வேண்டும், எமது தாய் மீண்டும் திரும்பி வரவேண்டும், என தெரிவித்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்ஸ சற்றுமுன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். இவருடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் வருகை தந்துள்ளார்.

இதனால் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும், மஹிந்தவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஸ சற்றுமுன் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment