சம்மாந்துறை காத்தாண்ட வட்டை மாவடி இறக்க பாலத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு.


உள்ளுராட்சி, மாகான சபைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 3கோடியே 50இலட்ச ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை திருவள்ளுவர்புரத்தையும், மல்லிகைத்தீவினையும் இணைக்கும் நேந்தலா புதுக்கண்ட(காத்தாண்ட வட்டை) மாவடி இறக்கத்திற்கான பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (21) இடம்பெற்றது.
சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் திருமதி எம்.எஸ். றிப்னாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

பொதுமக்களினதும், விவசாயிகளினதும் நீண்டகாலத் தேவையாகவிருந்த இப்பாலம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் அயராத முயற்சியினால் இப்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.இப்பாலமானது 22மீற்றர் நீளமும், 20அடி அகலமும் கொண்டதும், . வாகனங்கள் செல்வதற்கும், பாதசாரிகள் நடந்து செல்வதற்குமான வசதிகள் அயைமவுள்ளது மத்தியமுகாம், சவளக்கடை, மஜீத்புரம், மல்வத்தை, திருவள்ளுவர்புரம் ஆகிய கிராம மக்கள் மல்லிகைத்தீவிற்கும், நெயினாகாடு போன்ற கிராமங்களுக்கு பொதுமக்களும் விவசாயிகளும் மிக அலகுவாக இப்பாலத்தின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளலாம்.

மேலும் நேந்தலா புதுக்கண்டம், காத்தான்ட வட்டைகளில் விவசாயத்தினை மேற்கொண்டு வரும் 1000ற்கும் மேற்பட்ட விவசாயிகள் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முகம்மட் ஹனீபா, மௌலவி எம்.கே.எம். றம்ஸின் காரியப்பர், நேந்தலா புதுக்கண்ட கமக்கார்ர் அமைப்பின் தலைவர் எம்.ரி. பௌசுல்லா, சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் கே.எம்.முஸ்தபா, விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment