மாத்தறை நீர் வழங்கல் திட்டத்தின் வேலைகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் ஹக்கீம்.

மாத்தறை நீர் வழங்கல் திட்டத்தின் 4ஆம் கட்ட செயற்திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதம அதிதியாக கலந்துகொண்டு இன்று (06) ஆரம்பித்துவைத்தார்.

இத்திட்டத்தினால் நாளொன்றுக்கு 60,000 கனமீற்றர் நீர் வழங்குவதன் மூலம் மாத்தறை, திஹகொட தெவிநுவர, திக்வெல்ல, வெலிகம, வெலிபிட்டிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, கிரிந்த, அதுரலிய, பெலியத்த, தங்கல்லை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 284,808 பேர் நன்மையடையவுள்ளனர்.

இலங்கை மக்களின் பாதுகாப்புமிக்க குடிநீர் தேவையை பூா்த்திசெய்வதன் பொருட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தேசிய அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் வழிநடத்தலில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

சிறுநீரக நோய்க்கு எதிராக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டத்தின்கீழ் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 18,208  மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இத்திட்டம் இன்னும் 3 வருடங்களின் பின்னர் நிறைவுபெறும். 

இதன் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெணான்டே புள்ளே, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment