அமைச்சர் ஹக்கீம் தன்னிடம் உள்ள கட்சியின் அதிகாரத்தை கொண்டு எத்தனையோ விடயத்தை செய்யலாம்.

(ஹபீல் எம் சுஹைர்-HMS)

சில நாட்கள் முன்பு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அலுத்கமை கலவரம் தொடர்பில் உரையாற்றிய போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை பத்திரத்தை சமர்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ள அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது விடயத்தில்  வெற்றியும் பெற்றுள்ளார். அனைத்தும் முடியும் இறுதி தறுவாயில் குறித்த அமைச்சரவை பத்திரத்தை சிலர் எதிர்த்த போது அமைச்சர் ஹக்கீமும் சற்று பேசியுள்ளார்.

இதனை வைத்து, இதனை தானே செய்தது போன்று தனது ஊடகவியலாளர்களை கொண்டு செய்தி எழுதி வெளியிட்டிருந்தார்.அச் செய்தியை வெளியிட்டவர் ஹக்கீமின் ஊடக பிரிவில் பணியாற்றுபவர்.குறித்த விடயத்தில் தொடர் முயற்சிகளை செய்து வரும் ஹிஸ்புல்லா இவ் விடயத்தை சிறிதும் வெளிப்படுத்தாத நிலையில் ஹக்கீமின் ஊடக பிரிவு இதனை செய்திருந்தது. இதனைத் தான்  நிறைகுடம் நீர் தளும்பல் இல் என கூறுவார்கள்.

ஒரு பிள்ளைக்கு உரிமை கொண்டாட, பிள்ளை கிடைக்கப்பெற்ற பெண்ணுடன் உறவு கொண்டிருத்தல் உட்பட எத்தனையோ விடயங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு அப் பெண் குழந்தை பெற வைத்தியாசாலை செல்ல ஓட்டோ பிடித்து கொடுத்து விட்டு நானும் அப் பிள்ளையின் தந்தை எனலாமா? இது போன்றே அமைச்சர் ஹக்கீம் நிலை உள்ளது.

அமைச்சர் ஹக்கீம் உறுதியாக இருந்தால் தன்னிடம் உள்ள கட்சியின் அதிகாரத்தை கொண்டு எத்தனையோ விடயத்தை செய்யலாம். அதனை விட்டுவிட்டு ஹிஸ்புல்லாஹ்வின் பெரும் முயற்சியில் பெறப்பட்ட இவ்விடயத்துக்கு இறுதியில் பெயர் பெறும் இழி செயலை செய்துள்ளார்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment