அல் அமீன் வித்தியாலயத்தின் கட்டிட நிர்மாணப் பணிகளுக்கு ஹிஸ்புல்லாஹ்வினால் ஐந்து மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு .

புதிய காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தில் 2 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மூன்று மாடிக் கட்டிடப் பணிகளை பூர்த்தி செய்ய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் மேலும் ஐந்து மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடந்த ஆட்சியில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக இருந்த போது “கிழக்கின் உதயம்” மற்றும் “தெயட்ட கிருல்ல” போன்ற திட்டங்களினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபாய் நிதியில் அல் அமீன் வித்தியாலயத்தின் மூன்று மாடிக்கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 

இப்பணிகளை மிக விரைவில் பூர்த்தி செய்வதற்காக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து மேலும் 5 மில்லியன் ரூபாய் நிதியை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஒதுக்கீடு செய்துள்ளார். 

அண்மையில் கட்டிட நிர்மாண வேலைகளை பார்வையிட அல்அமீன் வித்தியாலயத்துக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர், அங்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களை சந்தித்து மேலதிக தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். 

இதற்கமைவாக பாடசாலைக்கான வரவேற்பு கோபுரம் அமைப்பதற்கும் தான் பங்களிப்பு வழங்குவதாகவும் இதன் போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment