கிழக்கு மாகாணத்தை ஊடறுத்து நெடுஞ்சாலை அமைக்குமாறு சபையில் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை.

ஆர்.ஹஸன்)

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களில் உள்ள சேதமடைந்த வீதிகளை புனரமைக்க நெடுஞ்சாலை அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் பல நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அது போன்று கிழக்கு மாகாணத்தை ஊடறுத்து கல்முனை வரை அல்லது பொத்துவில் வரை நெடுஞ்சாலையொன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்களை பதிவுசெய்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கான குறை நிரப்பு பிரேரணை மற்றும் விளையாட்டு சட்டத்தின் கீழ் ஓழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 

“யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மோசமான நிலையில் பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக வீதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் பரிபூரணப்படுத்தப்படவில்லை. 

யுத்தத்துக்கு பின்னர் நாட்டில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் பின்தங்கியுள்ளோம். நெடுஞ்சாலைகள் அமைப்பதில் மேலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 

இவ்வாறு வீதிகளை மேலும் அபிவிருத்தி செய்யும் போது மாத்திரமே வெளிநாட்டு முதலீட்டாள்களை அதிகம் கொண்டுவர முடியும்.  யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டம் மோசமான நிலையில் பின்தங்கியுள்ளது. முதலீட்டாளர்களை அங்கு அழைத்து செல்ல முன்னர் நெடுஞ்சாலைகள் இருக்கின்றனவா? என்று கேட்கின்றனர். 

பெருந்தெருக்கள் இல்லாமையால் முதலீட்டாளர்களை கொண்டு செல்ல முடியாதுள்ளது. நெடுஞ்சாலைகளை கல்முனைவரை அல்லது பொத்துவில் வரை நீடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். ஹபரணை தொடக்கம் மட்டக்களப்பு வரையில் உள்ள பிரதான வீதி நான்கு தடங்களைக் கொண்ட வீதியாக தரமுயர்த்தப்பட வேண்டும்.

இதனூடாக அம்பாறை மாவட்டத்தில் தொழில்துறைகளை அதிகரிக்க முடியும். மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு மைதானங்களை புனரமைக்க வேண்டும்” - என்றார். 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

1 comments:

  1. Hey There. I found your blog the use of msn. This is a really neatly written article. I will make sure to bookmark it and return to read extra of your useful information. Thank you for the post. I will certainly return. netflix member login

    ReplyDelete