சமூகத்தை விட்டுவிட்டு நல்லாட்சியை காப்பாற்ற துடிக்கும் மனோ கணேசன்.

மனோ கணேசன் ஐயா அவர்கள் கிளிநொச்சிக்கு சென்று காணாமல் போனாரின் குடும்பத்திடம், உங்கள் பிள்ளைகள் காணாமல் போனது சென்ற அரசாங்கத்தில் என்றும், இந்த அரசாங்கத்தில் அது நடக்கவில்லை என்றும் கூறி நல்லாட்சி அரசாங்கத்தை காப்பாற்றும் நோக்கத்தில் பேசியபோது.

காணாமல் போனவர்களின் தாய் இப்படி பேசினார்...

கடந்த அரசாங்கத்தில் இன்ற ஜனாதிபதிதான் பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருந்தவர் அவருக்கும் இதிலே பங்குண்டு. இருந்தாலும் தான் ஆட்சிக்கு வந்தால் நூறு நாட்கள் திட்டத்தின் கீழ் இதற்கு தீர்வை பெற்றுத்தறுவேன் என்று வாக்குறுதி தந்தார் இன்றய ஜனாதிபதி மைத்திரி அவர்கள், இப்போது அதனைப் பற்றி கதைப்பதையே அவர் நிறுத்திவிட்டார்.


அப்படியென்றால் கடந்த அரசாங்கத்திடமே நாங்கள் கேட்டிருப்போம் இவர் செய்வார் என்று நினைத்துத்தான் நாங்கள் இவருக்கு வாக்களித்தோம், இவரும் கவணியாது விட்டால் என்ன அர்த்தம்.இவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்றுதானே அர்த்தம் என்று கூறினார்.


இதற்கு பதில் சொல்லமுடியாது இருந்தார் மனோ கணேசன் ஐயா அவர்கள்.

இதிலிருந்து என்ன விளங்குகிறது. நாம் கொண்டுவந்த நல்லாட்சி தனது சமூகத்தை ஆசைகாட்டி மோசம் செய்து வருகிறது என்று அறிந்தும்கூட, சமூகத்துக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதை விட்டு விட்டு, இந்த நல்லாட்சியை காப்பாற்றுவதற்கு அவர் படும் பாட்டை பார்த்தாலே புரிகிறது, இவர்களின் நோக்கம் என்னவென்று.

ஆகவே, ஒரு எதிரியை கூட மன்னித்துவிடலாம், ஆனால் ஆசைகாட்டி மோசம் செய்யும் ஒருவனை மன்னிக்கவும் கூடாது அவனை நியாயப்படுத்தி பேசவும் கூடாது இதுதான் உண்மையாகும்.

அதே போன்றுதான் முஸ்லிம் சமூகமும் ஏமாற்றப்பட்டு வருகின்றது. அதனை யெல்லாம் புரம் தள்ளிவிட்டு நமது அரசியல்வாதிகள் பதவிகளையும் பட்டத்தையும் பாதுகாப்பதற்காக இந்த நல்லாட்சி செய்யும் அநியாயங்களை கண்டும் காணாதவர்கள் போல் இருக்கின்றார்களே அது இதைவிட கொடுமையாகும்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment