நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றமை வரலாற்று சாதனை.


இந்த நாட்டில் இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றமை வரலாற்று சாதனை என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். 

கினிகத்தேனை பிரதேசத்தில் வாழும் மக்கள் மத்தியில் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்யும் வகையில் நேற்று (13) நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் அழைப்பின் பேரில் வருகை தந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட மக்களிடம் விசேட கலந்துரையாடல் ஒன்று கினிகத்தேனை கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. 

அதன்பின் அவரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். 1948ம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின் இந்த நாட்டில் இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றமை வரலாற்று சாதனை.  இந்த நல்லாட்சி அரசாங்கம் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களின் பாரிய அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்டது. 

இரு கட்சிகளை சார்ந்த இரு தலைவர்கள் உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்தில் அடிமட்டத்திலுள்ள ஒரு சிலரின் கருத்து வேறுபாடு காரணமாக குழப்ப நிலைமைகள் உருவாக்கபடுகின்றது.  புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டு செல்ல கூடிய வாய்ப்புகள் உள்ளது.

நான்கரை வருடத்திற்கு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் இந்த அரசாங்கத்தை வழிநடத்தி செல்ல இரு தலைவர்களும் உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் இருக்கும் அதே போல் 113 ஆசனங்கள் இருக்குமாயின் அதனை வைத்துக் கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.  
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment