சாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ தேவை இல்லை.

சாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோகேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப்பிரயோசனமும் இல்லை .

தற்போது மாநகர சபை என்ற பெரும் அந்தஸ்த்தில் அடங்கி உள்ளசாய்ந்தமருது தனியாகப் பிரிக்கப் படுமானால் அதன் விளைவாக   எதிர்கால பின் விளைவுகள் என்ன என்பது பற்றிய எதிர் கால தூர நோக்குள்ளஆரோக்கியமான சிந்தனை  அல்ல என்றே கூற வேண்டும் 

நான் இங்கு கூறிக் கொள்வது மனிதர்களின் சிந்தனை-மனம்-சுற்றம்எனும் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு அமைவதுஎல்லாமனிதர்களுக்குமே உணர்ச்சி என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது.அப்படி இருக்க ஓர் எதிர்வினைக்கு அல்லது வெளிப்பாட்டுக்கு சிந்தனைமுக்கியமா அல்லது உணர்ச்சி முக்கியமா என ஓர் உடனடி தீர்வு காணமுடியுமா?" என்பதே 

தற்போது மாநகர சபை அந்தஸ்தில் உள்ள சாய்ந்தமருத்துக்கு என்னவகையான பிரச்சினைகள்  என முதலில்  அலசப் படவேண்டும் ,அலசப்பட்டு அவைகளை தீர்ப்பதுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமே அன்றிகுறு கிய சிந்தனையோடு பிரித்தெடுப்பது புத்திசாலித் தனமன்று.தமிழர்கள் ,முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ வழி தேட வேண்டுமேஅன்றி பிரித்தாழ வேண்டும் என்ற கோஷம் அடியோடு அகற்றப்படவேண்டும் 

சாய்ந்தமருதை பிரித்தெடுப்பதன் மூலம் கல்முனைக்குடிமருதமுனைபோன்ற முஸ்லிம்கள் வாழும் பிரதேசம் வலு இழந்துஅனாதைகளாகப்படும் அத்துடன் கல்முனை என்று புகழ் பெற்ற நகரம்முஸ்லிம்களின் கையை விட்டும் சோரம் போகும்.

சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கப்பட வேண்டுமென்பதில் உங்களை விட கல்முனைத் தமிழர்கள் வேகமாகஇருக்கிறார்கள்சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபைவழங்கப்பட்டால் அதனை காரணங்காட்டி கடற்கரைப் பள்ளி றோட்டுக்குமேலுள்ள கல்முனை நகரம் உள்ளிட்ட பிரதேசங்கனை உள்ளடக்கிஅவர்களுக்கு தனியான பிரதேச சபைபிரதேச செயலகம் மட்டுமல்லகல்முனை எனும் பெயரும் கூட அவர்களுக்கு மட்டும்தான சொந்தம்என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்

சாய்ந்தமருதும் பிரிக்கப்பட்டால் கல்முனை முஸ்லிம்களின் முழுப்பொருளாதாரமும் உள்ளடங்கிய கல்முனை செயலகம் மற்றும் பிரதேசசபையை அவர்களின் கைகளுக்குள் கொண்டு வந்து விடலாம் எனதமிழர்கள் நம்புகிறார்கள்

ஆகவே பேசித் தீர்மானிக்க வேண்டிய விடயத்தை பேசாமல்தீர்மானிப்பது தவறுஅது குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்தலாம் என்பதைநாம் உணர வேண்டும்.

 சித்தம் கலங்கியவனின் அறிவு சிந்திக்க மறுக்கும்। சித்தம்தெளிந்தவனின் அறிவு சிந்தித்துக் கொண்டே இருக்கும்ஆகவே  நீங்கள்இன்னும் ஆழமாக சிந்தித்து அருமையான நல்ல முடிவை எடுக்கவேண்டும் என்பதே எனது அவா 

எனவே பிரச்சினைக்கு தீர்வு காண சாய்ந்த மருதைப்  பிரிப்பதல்லவிடை அதை எப்படி தீர்த்து வைக்க முடியும் என்று சிந்தித்து முடிவுஎடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து. மேலும் சாய்ந்தமருது நகரசபையோ அல்லது  பிரதேச சபையோ தேவை இல்லை.சாய்ந்தமருது ,கல்முனை மாநகர சபையை விட்டுப் பிரியாது என தேசிய ஜனநாயக மனிதஉரிமைகள் கட்சி இஸ்தாபகர்  மொஹிடீன் பாவா தனது கருத்தைவெளியிட்டார்
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment