உழ்ஹிய்யாவின்போது புத்திசாதுரியமாக நடந்து கொள்வது காலத்தின் கட்டாயம்!

இன்னும் சில நாட்களில் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம். ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யாவை (குர்பானி) நிறைவேற்றுகின்றபோது நாட்டின் நிலவரங்கள்நாம் வாழுகின்ற சூழல் என்பவற்றைக் கவனத்திற் கொண்டு செயற்படுவது காலத்தின் கட்டாயம். உழ்ஹிய்யா தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்குகின்ற மார்க்க சட்ட திட்டங்கள் மற்றும் பொதுவான வழிகாட்டல்களுக்கேற்ப முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டுமென முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா வினயமாக வேண்டிக் கொள்கிறது.

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா மற்றும் ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன்இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

குறிப்பாக உழ்ஹிய்யாவை நாட்டின் சட்ட திட்டங்கள்விதிமுறைகளுக்கமைய நிறைவேற்ற வேண்டும்.

உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை கொள்வனவு செய்யும்போதும் அவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போதும் உரிய அத்தாட்சிப் பத்திரங்களைப் பெற்றிருத்தல்மிருகங்களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்துதல்வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவுக்கேற்ப பிராணிகளை வாகனத்தில் ஏற்றுதல்உழ்ஹிய்யாவுக்குப் பொருத்தமான இடம்,நேரம் என்பவற்றை தீர்மானித்துக் கொள்ளுதல்குர்பான் தொடர்பான விளம்பரங்களை பொது ஊடகங்களில் பிரசுரிப்பதைத் தவிர்த்துக் கொள்ளல்,அவ்வப் பிரதேச நிலவரங்களைக் கவனத்திற் கொண்டு பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஆலோசனைகளைப் பெற்று தனியாகவோ அல்லது கூட்டாகவோ உழ்ஹிய்யாவை நிறைவேற்றுதல்குர்பான் செய்யப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை பொறுப்புணர்வுடன்உரிய முறையில் புதைப்பது முதலான விடயங்களில் முஸ்லிம் சமூகம் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

குறிப்பாக பல்லினங்களோடு வாழும் நாம்பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படப்படும் வகையிலோ நடந்து கொள்ளவே கூடாது. போயா தினத்தன்று அறுப்பு செய்வதை முற்றாக தவிர்ந்து கொள்வதும் பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யாவை முறையாக நிறைவேற்றுவதும் மிகவும் அவசியமாகும்.

முஸ்லிம் சமூகம் தொடர்ந்தேச்சியாக பல்வேறு சவால்களைதாக்குதல்களை எதிர்நோக்கி வந்தபோதிலும் தற்போது ஓரளவு தணிந்திருக்கின்ற நிலையில்இந்த ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம்.

எனவேசந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் சிலர் எமது உழ்ஹிய்யா நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிக்கக் கூடும். அத்தகையோருக்கு சந்தர்ப்பம் அளித்து விடாமல் மிகக் கவனமாகவும் புத்திசாதுரியமாகவும் நடந்து கொள்வது எமது கடமையாகும்.

என்.எம். அமீன்
தலைவர்
முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment