பயங்கரமான எழுத்தாளர்களும் பல்பு முட்டை இரசிகர்களும் !

பாம்பு வீட்டினுள்ளே புகுந்த கதைகள் சொல்ல முன்னரெல்லாம் வீட்டில் உள்ள பொருட்களை முன்னிலை செய்வார்கள் ஆனால் இப்போதெல்லாம் வீட்டில் உள்ள மனைவி பெண் பிள்ளைகளை அடைமானம் வைத்து பயங்கரமாக எழுதி மக்கள் பார்வைகளை தங்கள் பக்கம் திருப்ப முயற்சி செய்கிறார்கள் !

”இலங்கையிலுள்ள முஸ்லிம் பயங்கரமான எழுத்தாளர்கள்”

இது பின்னவீனத்துவ வளர்ச்சி எனலாம்

தன்னிலை விளக்கம் சொல்லவும் தன்னை பற்றி பெருமையாக கூறி மக்கள் கவனத்தை திருப்பவும் அதிகம் முயல்கிறார்கள் இப்போதைய பயங்கரமான முஸ்லிம் எழுத்தாளர்கள் அதை அண்ணாந்து பார்த்துச் செக்கு மாடுகள் போல தலையாட்டவென்றே காலாகாலமாக புராணக்கதைகளில் வரும் கேரட்டர்கள் போல இன்னமும் எம் மத்தியில் தலையாட்டி பொம்மைகளும் உணர்ச்சி இல்லாத ஜடங்களும் உலவத்தான் செய்கின்றன ..

இன்னும் ஒரு படி மேலே சென்று மனைவியின் புகைப்படங்களை முகனூலில் பதிவேற்றி அதிலே கிளுகிளுப்பு அடைகிறார்கள் சில முஸ்லிம் பெயர்தாங்கிய இலங்கை வாழ் பயங்கரமான எழுத்தாளர்கள் அவர்கள் எந்தவகையான மனோநிலை உடையவர்கள் என்பதை பலரும் புரிய முடியாதவர்களாக இருக்க வாய்ப்புமில்லை !

சுய தம்பட்டம் அடிப்பதிலும் அதை இரசிப்பதிலும் காலம் தள்ளும் இந்த பயங்கரமான இலங்கை வாழ் இஸ்லாமிய எழுத்தாளர்களின் புரட்சிகரமான எழுத்துக்கள் பல நூறு புரட்சிகரமான இரசனை உள்ளவர்களால் ஆராதனை செய்யப்படுவதொன்றாக இருக்கிறது .


கால மாற்றங்களில் ஏற்பட்ட புரட்சிகரமான சமூக மாற்றங்களில் இதுவும் ஒன்று இந்த விடயங்களை சுட்டிக்காட்டி எழுதும் போதே ஆமாம் இது பிழையான விடயம்தான் என பலருக்கு மனதில் படுகிறது மற்றபடி அதை விரும்பியோ அல்லது விரும்பாமலோ கண்டு ரசித்து நகரும் மனோநிலையே எங்கிலும் காணப்படுகிறது !

அடிமை உணர்ச்சி என்பது ஒருவருக்கு அல்லது ஒரு குழுவிற்கு அடிமைப்பட்டிருப்பதில் மட்டுமல்ல “ஒருவன் கூறும் கருத்து அல்லது அதை கொண்டு சேர்க்கும் வழிமுறை தவறாக இருந்தும் அதை பிழையென சொல்ல வக்கற்று நகர்ந்து செல்லுவது கூட நவீன கால அடிமைத்தனத்தின் உச்சம்தான்”

பண்டைய காலங்களில் இதிகாசங்களில் கூறப்பட்ட அடிமைத்தனம் பரிணாம வளர்ச்சி பெற்று எதையும் அடிப்படை இன்றி ஏற்றுக்கொள்ளும் மனோனிலையினை எங்குமே எல்லா சமூக மட்டங்களிலும் அதிகரித்து விட்டிருப்பதை எங்கேயும் காணக்கூடியதாக இருக்கிறது, இது அறிவு வளர்ச்சியின் அறிகுறியல்ல மாற்றமாக அறிவு மந்தம் அடைந்த நிலையின் வெளிப்பாடாகும் தேடல் அற்ற ஒரு தெளிவற்ற நிலையின் முதிர்ந்த நிலை எனலாம் !

இது பயங்கரமான எழுத்தாளர்களினதும் பல்பு முட்டை இரசிகர்களின் கவனத்திற்கு மட்டுமேயானது -
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment