வறுமைக்கோட்டின் கீழ் வாழும் விசேட தேவையுடையோருக்கு சுயதொழில் முயற்சிகளுக்கான உதவிகள்.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நிந்தவூர்ப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் விசேட தேவையுடையோருக்கு பல்வேறு  சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடக் கூடிய விதத்தில் ரூபாய் 25,000.00 பெறுமதியான காசோலைகள் வழங்கும் நிகழ்வு  நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முர்ஷித் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, உரியவர்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.



மேலும் இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஏ.ஜெமீலா புஹாது, சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் ஏ.மஜீட் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் சமூக சேவை அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபாய் 1,46,000.00 நிதி தெரிவு செய்யப்பட்ட 07 பயனாளிகளுக்கு பங்கிட்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment