புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் ஏற்பாட்டில், பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு உதவி.

புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின்; சுவிஸ் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில், பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட உதவி, இரத்தினபுரியில் பகிர்ந்தளிக்கப்பட்டது… 

இருமாதங்களுக்கு முன்னர் இலங்கையின் மலையகம், களுத்துறை, இரத்தினபுரி, காலி, அம்பாந்தோட்டை உட்பட தென்னிலங்கை எங்கும் ஏற்பட்ட மழை, வெள்ளம் அனர்த்தங்களினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சில தமிழ் உறவுகள் தந்த பொருட்களை “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் (சுவிஸ் பிரதிநிதிகள்) சார்பில் பொறுப்பேற்று, சுவிஸில் உள்ள பௌத்த விகாரை பீடாதிபதியின் உதவியுடன் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்க்காக ஒப்படைத்து வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.மேற்படி பொருட்களை சுவிஸ் பேர்ண் மாநில, கும்லிங்கன் பகுதியில் உள்ள “சிலோவா” வைத்தியசாலையில் (SILOHA Spital, Gumlingen) தொழில் புரியும் திரு.அ.கைலாசநாதன் (குழந்தை), அங்குள்ள நிர்வாகத்திடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அந்த “சிலோவா வைத்தியசாலை” நிர்வாகம் தந்த பொருட்களுடன், மேலும் சில தமிழ் உறவுகளும் தந்த பொருட்கள் யாவும், சுவிஸில் உள்ள சூரிச் பௌத்த விகாரை பீடாதிபதி வணக்கத்துக்குரிய கருவெலகஸ்வெவ அனுருத்த தேரோ அவர்களின் உதவியுடன் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்க்காக ஒப்படைத்து வைக்கப்பட்டு அனுப்பப் பட்டதும் நீங்கள் அறிந்ததே.  புங்குடுதீவு "தாயகம் சமூக சேவை அகம்" அமைப்பின் சுவிஸ் பிரதிநிதிகள், நண்பர்களின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட உதவிகள் நேற்றுமுன்தினம் (17.08.2017 அன்று) இரத்தினபுரி பகுதியில் வைத்து பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து, சூரிச் பௌத்த விகாரை பீடாதிபதி வணக்கத்துக்குரிய கருவெலகஸ்வெவ அனுருத்த தேரோ அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், "நாம் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்து இங்கு வாழ்ந்தாலும், தமிழ் சிங்களம் என்ற வேறுபாடு இன்றி, புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக வாழ்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேயத்துடன் உதவி புரிந்த அனைத்து தமிழ் மக்களுக்கும், இதனை ஏற்பாடு செய்த அமைப்பின் (“தாயகம்” -புங்குடுதீவு) பிரதிநிதிகளுக்கும், தமது நன்றி எனவும், இவர்களுக்கு புத்தபெருமானின் ஆசி கிடைக்க, தாம் பிரார்த்திப்பதாகவும், மேற்படி உதவிகளை பெற்றுக் கொண்ட மக்கள் மிக மனம் மகிழ்வதாகவும், அவர்களின் அன்பையும் பகிர்ந்து கொள்வதாகத்” தெரிவித்தார்.** “இன, மத பேதம் பாராமல்; மனிதத்தையும், மனித நேயத்தையும் மதிக்கும் “மனிதர்கள்” நாம்.. என்பதை புரிய வைத்த, அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது நன்றி”.. **

கடந்த காலங்களிலும், “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் சார்பில், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, செட்டிக்குளம், மற்றும் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு புங்குடுதீவு உறவுகளின் (குழந்தை, குமார், தயா, பன்னீர், அன்பு) உதவியுடன், எம்மால் முடிந்த உதவிகளை புரிந்து இருந்தோம்.இப்போது தென்னிலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினை தொடர்ந்து “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் சார்பில், எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது நன்றி.. அத்துடன் சுவிஸில் உள்ள சூரிச் பௌத்த விகாரை பீடாதிபதியுடன் தொடர்பை ஏற்படுத்தித் தந்து உதவிய திரு.அஜீவன் அவர்களுக்கும் எமது நன்றி..

இவ்வண்ணம்..
செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாரு.
செயலாளர்,
“தாயகம் சமூக சேவை அகம்” -புங்குடுதீவு 
18.08.2017
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment