அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க விரைவில் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­யலாம்.

வெளி­வி­வ­கார அமைச்சர் பத­வி­யிலி­ருந்து இரா­ஜி­னாமா செய்­யு­மாறு அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு பிர­யோ­கிக்­கப்­படும் அழுத்­தங்கள் அதி­க­ரித்து வரு­கின்ற நிலையில் இன்னும் சில தினங்­களில் தனது பத­வியை அவர் இராஜி­னாமா செய்வார் என அரச தரப்பு வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

இரண்டு கட்­சி­க­ளுக்­கி­டை­யிலும் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை­மை கள், மற்றும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்­குள்ளே ஏற்­பட்­டுள்ள அமைச்சர் ரவி மீதான எதிர்ப்பு மற்றும் விமர்­ச­னங்கள் என்­ப­வற்றின் கார­ண­மாக அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது பத­வியை தற்­கா­லிக அடிப்­ப­டையில் இரா­ஜி­னாமா செய்வார் என தெரி­ய­வ­ரு­கி­றது. மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் கோரிக்­கைக்கு அமை­வாக அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தற்­கா­லிக ரீதியில் இரா­ஜி­னாமா செய்­ய­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ராக கூட்டு எதி­ர­ணி­யினர் கடந்­த­வாரம் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்­பான விவா­தத்தை எப்­போது நடத்­து­வது என்­பது தொடர்­பாக நாளை வியா­ழக்­கி­ழமை கட்சித் தலை­வர்கள் கூடி பாரா­ளு­மன்­றத்தில் விவா­திக்­க­வுள்­ளனர்.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்­குள்ளும் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ரான அழுத்­தங்­களும் விமர்­ச­னங்­களும் எழுந்­துள்­ளன. இது­வரை 20க்கும் மேற்­பட்ட அமைச்­சர்கள் வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­க­வேண்­டு­மென அழுத்தம் பிர­யோ­கித்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன் இது­தொ­டர்பில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பெரும்­பாலும் அனைத்து அமைச்­சர்­களும் வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­க­வேண்­டு­மென வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.
சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் அமைச்­சர்கள், அதன் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை பதவி விலக்­கு­மாறு கோரி­யுள்­ளனர். அது­மட்­டு­மன்றி கூட்டு எதி­ர­ணியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க உட­ன­டி­யாக பதவி விலக வேண்டும் என்றும் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.

இதே­வேளை ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்­குள்­ளேயே அமைச்­ச­ருக்கு எதி­ராக கடும் நெருக்­க­டிகள் ஏற்­பட்­டுள்­ளன. குறிப்­பாக அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ, அமைச்சர் தயா கமகே, மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா ஆகியோர் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் பெயரைக் குறிப்­பி­டாமல் இந்த விடயம் தொடர்பில் கடும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

இந்த நிலை­யி­லேயே அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க விரைவில் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­யலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை அவசியமில்லை என்றும் அவர் சில தினங்களில் நாட்டினதும் கட்சியினதும் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு முடிவை எடுப்பார் என நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment