சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கனவும் தாகமுமான உள்ளூராட்சி மன்றம் இம்மாத இறுதிக்குள்!

(முக்தார் அஹமட்)

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கனவும்  தாகமுமான உள்ளூராட்சி மன்றம் இம்மாத இறுதிக்குள்!.... 

இன்று மாலை  14.08.2017 சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிப்பது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்று உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சில் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் இடம் பெற்றது, இங்கு கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் கெளரவ ரிஷாட் பதியுத்தீன் அவர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை இன்ஷா அல்லாஹ் இம்மாத கடைசி வாரத்திற்குள் விசேட வர்த்தமானி மூலம் வெளியிடுவதாகவும் தனது அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டு இருப்பதாகவும் தேசியத் தலைவர் ரிஷாட் அவர்களிடமும், பிரதித் தலைவர் ஜெமீல் அவர்களிடமும் உறுதியளித்தார்.  மேலும் அண்மைக்காலமாக முகநூலில் சாய்ந்தமருது உள்ளூராட்சி சம்பந்தமாக பலரும் உரிமை கோரும் தகவல்கள் பரிமாறப்படுகிறதே என்று அமைச்சர் ரிஷாட் அவர்களின் இணைப்புச் செயலாளர் சகோதரர் இர்சாட் ரஹ்மத்துல்லாவினால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் சம்பந்தமாக ஆரம்பம் முதல் இன்றுவரை என்னுடன் தொடர்புடன் இருப்பவர்களும், இதனை உரிமை கோருவதற்கு முழுத் தகுதியுடையவர்களும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் மற்றும்  ஜெமீலைத் தவிர வேறு யாரும் இல்லை என்று ஆணித்தரமாக  கூறிவிட்டு தனது கென்ய நாட்டுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இங்கு கட்சியின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கெளரவ ஏ.எம்.ஜெமீல், முன்னாள் கொழும்பு மாநகர சபை ஆணையாளரும், NEDHA தலைவருமான உமர் காமீல் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்சாட் ரஹ்மத்துல்லாவும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment