சம்மாந்துறையில் 85 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்.

(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 85 மில்லியன் ரூபாய் செலவில்  அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நேற்று (12) ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில்  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர் ஏ. காதிர், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.முஸ்தபா, நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செலயாளர் ரகுமத் மன்சூர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் எம்.எம்.நஸீல், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம், சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் என்.எம்.ஆஷீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் வை.வீ.சலீம், நீர் வழங்கல் அதிகார சபையின் அதிகாரிகள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.



இதன்போது அனைவருக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் செலவில் நெய்னாகாட்டுக்கான குடிநீர் விநியோகம், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஓதுக்கீட்டில் 30 மில்லியன் ரூபாய் செலவில் வண்டு வாய்க்கால் வீதிக்கான காபட் இடல், 15 மில்லியன் ரூபாய் செலவில் மல்2ஆம் வீதிக்கான காபட் இடல் ஆகிய வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment