சம்மாந்துறை ஆண்டிட சந்தி சமிட் புரத்திற்கு செல்லும் பிரதான வீதி புரமைப்பும், பாலம் நிர்மாணமும்.

அன்சார் காசீம்.

கடந்த 38 வருடகாலமாக புனரமைக்கப்படாதிருந்த சம்மாந்துறை ஆண்டிட சந்தி – சமிட் புரத்திற்கு செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்படுவதுடன், சமிட்புரத்தினையும், செந்நெல் கிராமத்தினையும் இணைப்பதற்கென விவசாயப் பாலமும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இப்பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாகயிருந்த இத்திட்டத்தினை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இதற்கென நீர்ப்பானச மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சின் நீர்ப்பாசனத்திணைக்களம் 10 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தினை துரிதமாக ஆரம்பிக்கும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், சம்மாந்துறை நீர்ப்பானத் திணைக்களப் பொறியியலாளர் திருமதி எம்.எஸ். றிப்னாஸ், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ஐ. அன்வர், நீர்ப்பானத்திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர்கள் நேற்று (21) சமிட்புரத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டார்.இப்பாதை புனரமைப்புச் செய்து பாலம் அமைப்பதன் மூலமாக பொதுமக்களும், விவசாயிகளும் சம்புமடு, செந்நெல் கிராம்ம், உடங்கா, மலையடிக்கிராம், தென்னம்பிள்ளைக் கிராம்ம் 20 வீட்டுத்திட்டம் போன்ற கிராமங்களுக்கு மிக இலகுவாக போக்குவரத்தினை மேற்கொள்வதோடு, இதன்மூலம் இக்கிராமங்களில் வாழ்ந்துவரும் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையவுள்ளனர்.

இவ்வேலைத்திட்டம் மிக விரைவில் ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் கனரக இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கவை.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment