சம்மாந்துறையில் 47 மில்லியன் ரூபாய் நிதியில் இரு நீர்ப்பாசன அபிவிருத்திகள்.


நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சினால் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் செயற்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதி உதவியுடன் சம்மாந்துறை நீர்ப்பாசனத் திணைக்களப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இரு வேலைத்திட்டங்கள் 47 மில்லியன் ரூபாய் நிதியில் நேற்று (02) ஆரம்பித்து வைக்கப்பட்டன.சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியலாளர் திருமதி எம்.எஸ்.றிப்னாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் ஆகியோர் அதிதிகளாக கலந்த கொண்டு இவ்வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக நெல்லிக்காடு ஆற்றுக்கு குறுக்கான விவசாயப் பாலம் 6.95 மில்லியன் ரூபா செலவிலும், உடங்கா ஆறு மற்றும் திராய் ஓடை வாய்க்கால் ஆகியவற்றின் புணர்நிர்மான வேலைகள் 40.42 மில்லியன் ரூபா செலவிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.நீர்ப்பாசன திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் கே.டி.என்.சிறிவர்தன, நீர்ப்பாசன திணைக்களத்தின் அம்பாரை மாவட்ட பிரதம பொறியியலாளர் எம்.ஏ.எஸ்.எஸ்.குணசேன, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.ஏ.சலீம், விவசாயிகள்,விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டங்களின் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நன்னையடையவுள்ளனர்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment