ஞானசாரர் கூட இவ்வாறு கீழ்த்தரமாக பேசியிருக்க மாட்டார் இவர் பேசுகிறார்.

மீராவோடை பாடசாலை காணி விவகாரத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையேமுரண்பாடு நிலவி வருகிறதுஇந்ந முரண்பாட்டை தனக்கு மிகவும் சாதகமாகபயன்படுத்திய மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர்முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தை பிரயோகத்தைகையாண்டிருந்தார்இப்படியான கீழ்த்தரமான வார்த்தை பிரயோகத்தை ஞானசாரதேரர் கூட பாவித்திருக்கவில்லை எனக் கூறினாலும் தவறாகாது.

குறித்த தேரர் ஞானசார தேரரின் நெருங்கிய சகாவாகும் என்பது யாவருக்கும்தெரியும்ஞானசார தேரர் அடக்கப்பட்டிருந்தாலும் அவரின் மூலம் நிகழ்த்தப்பட்டஇன வாத நிகழ்ச்சி நிரல்கள் டான் பிரசாத் மற்றும் இவ்வாறான தேரர்களால்முன்னெடுக்கப்படுகிறதுஇதனை இவ்வரசு கட்டுப்படுத்தாமல் வேடிக்கைபார்க்கின்றது.

இது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைஇதில் இவர் மூக்கைநுழைக்க வேண்டிய அவசியமில்லைஅல்லது இவருக்கு அனைத்துபிரச்சினைகளின் போதும் தலையிட்டு தீர்வை பெற்றுக்கொடுக்கும் அதிகாரம்வழங்கப்பட்டிருக்க வேண்டும்இவ்வரசு மறைமுகமாக இவ் அதிகாரத்தைவழங்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைஇந் நாட்டின் அதிகாரம் பௌத்தஅடிப்படைவாதிகளின் கைகளில் படிப்படியாக சென்று கொண்டிருப்பதை இதனூடாகஅறிந்துகொள்ளலாம்.

குறித்த தேரர் பிரச்சினை எழுந்த இடத்தில் நீதி மன்ற உத்தரவை கிழித்துவீசியிருந்தார்இதற்கு முன்பும் ஒரு தடவை அவர் நீதி மன்ற உத்தரவை கிழித்துவீசியிருந்தார்பௌத்த தேரர்களுக்கு நீதி மன்ற உத்தரவை கிழித்தெறியும்வகையிலான சட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்ற அச்சம் எழுகிறதுஇவரின்செயற்பாடானது இலங்கை நீதிதுறையின் செயற்பாட்டை பலவீனப்படுத்துகிறது.இதுவெல்லாம் இலங்கை நாட்டுக்கு சிறந்ததல்ல.

 அஹமட்-
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment